Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சு தேசத்தை வெறுத்த மாவீரன் நெப்போலியன்!!

பிரெஞ்சு தேசத்தை வெறுத்த மாவீரன் நெப்போலியன்!!

14 வைகாசி 2021 வெள்ளி 12:30 | பார்வைகள் : 19975


மாவீரன் நெப்போலியன் பிரெஞ்சு தேசத்தை வெறுத்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..?
 
ஆனால் அது உண்மை தான்! பிரெஞ்சு நாட்டின் மீதும், அதன் மக்கள் மீதும் மிகுந்த கோவத்துடனும்.. எதிர்ப்பு மனநிலையிலும் நெப்போலியன் இருந்தார். 
 
அது குறித்து அறிந்து கொள்ள நீங்கள் Corsica தீவுக்கு செல்லவேண்டும். பண்டய ஐரோப்பாவில்.... இந்த Corsica தீவுக்காக பெரும் போரே நடந்தது. போரென்றால் பெரும் அக்கப்போர்!! 
 
ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஜெர்மன், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் யார் இந்த Corsica தீவை உரிமை கொண்டாடுவது என்பது தான் அந்த போர். அப்படி ஜெர்மனி இந்த Corsica தீவை காலனியாக வைத்திருந்தபோது தான் அதே தீவில் நெப்போலியன் பிறந்தார். 
 
நெப்போலியன் அங்கு வளரும் போதே, அங்கு வசித்த உள்ளூர் மக்களால் ஜெர்மன் படையினருக்கு எதிராக அவ்வப்போது கிளர்ச்சிகள் தோன்றின. ஆனால் அந்த போராட்ட குழுக்களால் ஜெர்மனி வீரர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. இதை கண்ணுற்றே நெப்போலியன் வளர்ந்தார்.
 
பின்னர் 1767 ஆம் ஆண்டு இந்த Corsica தீவினை பிரான்சிடம் விற்றுவிட்டு ஜெர்மனி “ஊரைப் பார்த்து கிளம்பியது!’ 
 
முதலாளி மாறினார்களே தவிர Corsica மக்களின் தலையெழுத்தும், அடிமை வாழ்க்கையும் மாறவில்லை..
 
இப்படி ஒரு சூழ்நிலையில் தான் நெப்போலியன் அங்கிருந்து, பிரெஞ்சு அரசின் உதவியோடு தலைநகர் பரிசுக்கு வருகின்றார். 
 
அரசின் உதவியோடு பரிசில் அவர் தனது பள்ளி படிப்புகளை தொடர்கின்றார். அங்கு நெப்போலியனால் ‘மல்லு’ கட்ட முடியவில்லை. பிரெஞ்சு மாணவர்களின் ஆதிக்க மனநிலையையும், Corsica தீவில் இருந்து வந்திருந்ததால் ஏற்பட்ட கிண்டல் கேலிகளையும் நெப்போலியனால் சமாளிக்க முடியவில்லை. 
 
தனது தந்தைக்கு கடிதம் எழுதுகிறார். “நான் உடனே ஊருக்கு வர விரும்புகிறேன்!”
 
“அதெல்லாம் முடியாது. உனக்கு கல்வி தான் எதிர்காலம். அதை உனக்கு தர என்னிடம் வசதி இல்லை. பிரெஞ்சு அரசு தான் உனக்கு கல்வி புகட்டும்!” என தந்தை பதில் எழுதினார். 
 
தனது சொந்த ஊரை... அடிமையாக வைத்திருக்கும் பிரான்சிடமே நான் கல்வி தஞ்சம் புகுந்துள்ளோமே என தினமும் நெப்போலியன் வருந்தினார். இதனால் பிரெஞ்சு நாட்டின் மீதும் இந்த மக்கள் மீதும் பெரும் வெறுப்பு ஏற்பட்டது. ஆனால் சூழ்நிலை அவரை இங்கேயே கட்டிப்போட்டது.
 
பின்னர் அவர் வரலாறுகளை மிக தீவிரமாக கற்க ஆரம்பித்தார். உலக வரைபடங்களை மிக துல்லியமாக குறித்து வைத்துக்கொண்டார். இப்படி பிரெஞ்சு தேசத்தை வெறுத்த நெப்போலியனே பின்நாட்களில் ‘மாவீரன் நெப்போலியன்’ ஆனார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்