Paristamil Navigation Paristamil advert login

“Major Missing” CSK அணியின் புதிரான பதிவு- சோகத்தில் சென்னை ரசிகர்கள்

“Major Missing” CSK அணியின் புதிரான பதிவு- சோகத்தில் சென்னை ரசிகர்கள்

12 புரட்டாசி 2024 வியாழன் 08:59 | பார்வைகள் : 383


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் X தளப் பதிவு ஒன்று CSK ரசிகர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் தொடர்பான அறிவிப்புகள்  விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் சூழ்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த பதிவில் “Major Missing” என குறிப்பிட்டு, விசில், சேப்பாக்கம் மைதானம், ஆகியவற்றுடன் சேர்த்து தோனியின் 7 நம்பர் ஜெர்சியையும் வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே எதிர்வரும் ஐபிஎல் தொடரில் உடல்நிலை மற்றும் வயது காரணமாக விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில், “Major Missing” என்ற வார்த்தைகளுடன் தோனியின் 7 நம்பர் ஜெர்சியையும் சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிலர் அடுத்த சீசனில் தோனி விளையாட மாட்டார் என்பதையே சிஎஸ்கே அணியின் X தளப் பதிவு குறிப்பிடுவதாக தெரிவித்து வரும் நிலையில், பலர் “Major Missing” அப்படினு சிஎஸ்கே அணி நிர்வாகம் எதை தான் குறிப்பிடுறாங்கனு தெரியாமல் குழம்பி வருகின்றனர்.  

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்