தலைமறைவான பாடகர் மனோ மகன்கள்; காரணம் என்ன?

12 புரட்டாசி 2024 வியாழன் 09:55 | பார்வைகள் : 3999
மது போதையில் இருவரை தாக்கியதாக பாடகர் மனோ மகன்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இருவரும் தலைமறைவாக இருப்பதாகவும் அவர்களுடைய இருப்பிடத்தை செல்போன் சிக்னல் மூலம் கண்டறிந்த காவல்துறையினர் அந்த இடத்தை நோக்கி விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
தமிழ் திரையுலகின் பிரபல பாடகரான மனோவின் மகன்கள் ரபீக் மற்றும் சாகிர் ஆகிய இருவரும் வளசரவாக்கம் பகுதியில் கிருபாகரன் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவரையும் மது போதையில் தாக்கியதாகவும் இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் மனோ மகன்கள் இருவரும் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவர்களை தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இருவரும் செல்போன்களை ஸ்விட்ச் ஆப் செய்து வைத்திருந்தாலும் சிடிஆர் மூலம் கண்காணித்து இருவரும் இசிஆர் பகுதியில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தனிப்படை போலீசார் மனோ மகன்களை பிடிக்க ஈசிஆர் விரைந்துள்ளதாக தகவல் வழியாக உள்ளன.