Paristamil Navigation Paristamil advert login

நோர்து-டேம் தேவாலயத்தில் புதைக்கப்பட்டவர்களின் கதை!! (பகுதி 4)

நோர்து-டேம் தேவாலயத்தில் புதைக்கப்பட்டவர்களின் கதை!! (பகுதி 4)

13 வைகாசி 2021 வியாழன் 13:30 | பார்வைகள் : 19848


நோர்து-டேம் தேவாலத்தில் புதைக்கப்பட்டவர்களின் கதை இன்று இறுதி அத்தியாயத்தை எட்டுகின்றது. 
 
Maurice Feltin
 
இவரும் பிரெஞ்சு கத்தோலிக்க வரலாற்றில் மிக முக்கியமான ஒருவர். இவர் ஒரு புரட்சியாளரும் கூட. கத்தோலிக்க திருச்சபையில் புரட்சியாளருக்கு என்ன வேலை..? இருக்கின்றது. அப்போதெல்லாம் பாதிரியராகவோ அல்லது பேராயராக இருக்கவோ எவரும் ‘பணம்’ கொடுப்பதில்லை. மதிப்பும், மரியாதையும் இருக்குமே தவிர தனிப்பட்ட தேவைக்கு ‘சல்லி பென்னி’ கிடையாது. 
 
இதனை முதன்முறையாக உடைத்தவர் தான் திருவாளர் Maurice Feltin. பாதிரியராக இருப்பதும் ஒரு தொழில் தான். டிகிரி முடித்து கடமையாற்றுவது போன்றது என போராடி.. அதில் வெற்றியும் பெற்றார்.  திருமணம் செய்துவைக்க தனியே ஒரு ‘சார்ச்’, இன்ன பிற சடங்குகளுக்கும் தனித்தனியே சார்ச் என கட்டணம் அறவிட்டார். அது தேவையானதாகவும் இருந்தது. 
 
இதன் பின்னர் கத்தோலிக்கத்தை பயின்று பாதிரியானவர்கள் மிக அதிகம். பிற்பாடு இவர் இறந்த போது இவரை நோர்து-டேம் தேவாலய வளவுக்குள் புதைத்தனர். 
 
Marie-Dominique-Auguste Sibour
 
எனும் நீண்ட பெயருடைய பாதிரியாரும் மேற்படி Maurice Feltin இன் வழி வந்தவர் தான். கத்தோலிக்க பாதிரியார் ஆவதை தனது தொழில்முறையாக்கி, அதில் சேவைகளையும் செய்து சம்பாதிக்கவும் செய்தார். தெரியுமா செய்தி.. மூன்றாம் நெப்போலிய மன்னனுக்கு திருமணம் செய்து வைத்தவர் Marie-Dominique-Auguste Sibour தான். 
 
இவர் பரிசில் ரோமன் முறை சடங்குகளை அறிமுகம் செய்து வைக்க போராடினார். பல எதிர்ப்புகளுக்கு இடையில் பெரும் முயற்சிகளையும் மேற்கொண்டனர். ஆனால் சில நாட்களில் இவர் படுகொலை செய்யப்பட்டார். 
 
*** 
 
ஓகே.. இந்த கதைகளின் கதை நிறைவடைந்தது. ஒவ்வொரு கல்லறைக்குப் பின்னாலும் ஏதோ ஒரு கதை உண்டு. ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையில் போராடி பின்னால் வரும் சந்ததியினருக்கு ஒரு வழியை ஏற்படுத்தியே சென்றுள்ளனர். அவர்களின் ஆத்மா சாந்தியடைவதாக. 
 
(முற்றும்)

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்