Paristamil Navigation Paristamil advert login

நோர்து-டேம் தேவாலயத்தில் புதைக்கப்பட்டவர்களின் கதை!! (பகுதி 3)

நோர்து-டேம் தேவாலயத்தில் புதைக்கப்பட்டவர்களின் கதை!! (பகுதி 3)

10 வைகாசி 2021 திங்கள் 14:30 | பார்வைகள் : 19784


கடந்த இரண்டு நாட்களாக நோர்து-டேம் தேவாலயத்தில் புதைக்கப்பட்ட முக்கிய புள்ளிகளின் கதைகளை படித்து வருகின்றோம் இல்லையா..? இன்றும் தொடர்கிறது இது..!!
 
***
Louis-Antoine de Noailles
 
நோர்து-டேம் தேவாலயத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த மிக முக்கிய புள்ளி தான் இந்த Louis-Antoine de Noailles. இவர் மத போதகர். பிரச்சார பீரங்கி. எதிரிகளை நேருக்கு நேர் சந்திக்கும் போர் குணம் கொண்ட போர்வாள். 
 
இப்படிச் சொல்வதற்கு பல காரணங்கள் உண்டு. விஞ்ஞானம் வேகமாக வளர்ந்து வந்த 1700 வருடங்களில் இவர் கத்தோலிக்க பாதிரியராக இருந்தார். 
 
அப்போது விஞ்ஞானத்தின் அபரிவிதமான வளர்ச்சியால்.. மதங்கள் மீதும்.. அதன் நம்பிக்கை மீது கல் வீசப்பட்டது. மதங்களுக்கு எதிரானவர்கள் பலர் தோன்ற ஆரம்பித்ததும்.. கத்தோலிக்கத்தில் இருந்து பிரிந்து உட்பிரிவு மதங்களை ஆதரித்தவரும் என பல சிக்கல்கள் எழுந்தது. 
 
இத்தனை சமாச்சாரங்களையும் தனது இடதுகையால் டீல் செய்தவர் தான் மேற்படி திருவாளர் Louis-Antoine de Noailles. 
 
உட்பிரிவு மதக்கொள்கைகளை கொண்டிருந்தவர்களை தடாலடியாக பதவி நீக்கம் செய்ததோடு, அவர்களை கத்தோலிக்க மதத்தில் இருந்தும் அகற்றி.. தேவாலத்துக்குள் வரவும் கூடாது எனவும் கட்டளையிட்டார். 
 
மதங்களுக்கு எதிரான பிரச்சாரங்களை தனது தீவிரமான பேச்சுக்களால் தகர்த்து எறிந்தார். 
 
அதேவேளை தேவாலத்துக்குள்ளும், கத்தோலிக்க மதத்துக்குள்ளும் இடம்பெற்ற உட்பூசல்களையுமே திறமையாக சமாளித்தார். 
 
இதனால் அவர் கத்தோலிக்க மதத்துக்கு மிக மிக தேவையான ஒருவராகவும், எதிர்க்க முடியாத போர்வாளாகவும் இருந்தார். 
 
பின்னர் 1728 ஆம் வருடம் அவர் இறந்தபோது அவரை நோர்து-டேம் தேவாலயத்துக்குள் புதைக்க தீர்மானிக்கப்பட்டது. 
 
இதற்கு மிக முக்கியமான ஒரு காரணமும் உண்டு. தனது வாழ்நாளில் தாம் சம்பாதித்த பல சொத்துக்களை இந்த தேவாலய கட்டுமானப்பணிகளுக்காக வழங்கினார். வாரி வழங்கினார் என்று சொல்ல வேண்டும். 
 
இதனால் இவர் நினைவாக அவருக்கு ஒரு சிலையும் இங்கு வைக்கப்பட்டுள்ளது. 
 
(நாளையும் தொடரும்..)

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்