ஜி.எஸ்.டி., குறித்து பேச்சு: அமைச்சரிடம் வருத்தம் தெரிவித்த ஹோட்டல் அதிபர்

13 புரட்டாசி 2024 வெள்ளி 06:56 | பார்வைகள் : 5683
கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், தொழில் துறையினர் சந்திப்பு நிகழ்வு நேற்று முன்தினம் நடந்தது.
இதில் ஹோட்டல்கள் சங்கத் தலைவர் ஸ்ரீனிவாசன் பேசிய வீடியோ, சமூகவலைதளங்களில் பரவியது. இதையடுத்து அவர், அமைச்சர் நிர்மலா சீதா ராமனை நேற்று சந்தித்து, தனது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி விட்டதாக வருத்தம் தெரிவித்தார்.
அவர் அமைச்சரிடம் கூறுகையில், 'சங்கத்தில் விவாதித்த விஷயங்களை தான் பேசினேன். நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும். தமிழகத்தில் சிறிய கடை, பெரிய கடை அல்லது ஸ்டார் ஹோட்டல்கள், தெருவோர கடைகள் உள்ளிட்ட அனைவரையும் சேர்த்து ஒரு கூட்டம், நீங்கள் நடத்த வேண்டும்,' என்றார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1