Paristamil Navigation Paristamil advert login

நோர்து-டேம் தேவாலயத்தில் புதைக்கப்பட்டவர்களின் கதை!! (பகுதி 2)

 நோர்து-டேம் தேவாலயத்தில் புதைக்கப்பட்டவர்களின் கதை!! (பகுதி 2)

9 வைகாசி 2021 ஞாயிறு 12:30 | பார்வைகள் : 19765


நோர்து -டேம் தேவாலயத்தில் புதைக்கப்பட்டவர்களின் கதை இன்றும் தொடர்கிறது. நேற்றைய பகுதியை இதுவரை படிக்காதவர்கள், கீழே உள்ள இணைப்பில் சென்று படிக்கலாம். 
 
*****
 
Jean-Marie Lustiger
 
என்பவர் பிரெஞ்சு கத்தோலிக்க வரலாற்றில் மிக முக்கிய புள்ளி. இவர் பிறப்பில் ஒரு யூதர். தனது 13 ஆவது வயதில் இவர் கத்தோலிக்க மதத்தை தழுவிக்கொண்டார். இவரது பெற்றோர்கள் போலந்து நாட்டைச் சேர்ந்த யூதர்கள். நாடும் வேறு.. மதமும் வேறு.. இதனாலேயே அவரது போராட்டமும் மிகப்பெரியது. 
 
ஜெர்மனிய ஆக்கிரமிப்பு காரணமாக Jean-Marie Lustiger இன் பெற்றோர்கள் இவரை ஒரு கத்தோலிக்க சிறுவனாகவே வளர்த்தனர். வளர்ந்து இளைஞன் ஆனதும் இவர் பரிஸ் நகர பேராயர் ஆனார். ஆனால் அவர் ஒருபோதும் தனது யூத மதத்தின் வேரை மறக்கவில்லை. 
 
அவர் கத்தோலிக்க மதத்துக்கு தொண்டாற்றினாலும் அவரது ஆவணங்களில் யூத மதம் என்றே குறிப்பிட்டிருந்தது. 
 
அப்போது பிரான்சில் யூத மதத்துக்கு எதிரான பிரச்சாரங்கள் பரவலாக எழ, இவர் மீது தொடர் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஒரு யூத மதத்தைச் சேர்ந்தவர் எமது மத போதகராக இருப்பது எப்படி என சர்ச்சைகள் எழுந்தது. இதனால் அவர் பரிசை விட்டு புறப்பட்டு இஸ்ரேஸ் நாட்டுக்குச் செல்ல துடித்தார். 
 
ஆனால் அவரை இரண்டாம் ஜோன் பால் பாப்பரசர் வெளியேற அனுமதிக்கவில்லை. அவரை பரிசில் இருந்து அழைத்து Orleans நகரில் பேராயராக அறிவித்தார். 
 
அவர் இப்போது, தேவாலயம் ஊடாக பலருக்கு உதவிகளை செய்தார். இளைஞர் பட்டாளம் பலருக்கு பல நன்கொடைகளை அள்ளி வழங்கினார். 
 
கடந்த 2007 ஆம் ஆண்டு அவர் இறக்கும் போதும் கூட அவரை பிரெஞ்சு மக்கள் முழு மனதோடு “கத்தோலிக்க போதகராக” ஏற்கவில்லை. 
 
இப்போது, பிரெஞ்சு அரசு ஒரு நல்லிணக்க வேலையை பார்த்தது. Jean-Marie Lustiger இன் சடலத்தை நோர்து-டேம் தேவாலயத்தில் புதைக்க அனுமதித்தது. இதனால் கத்தோலிக்க-யூத இணக்கப்பாடு ஏற்படும் எனவும், அதற்கு முன் உதாரணமாக இது இருக்கும் எனவும் இந்த முடிவு எட்டப்பட்டது. 
 
இவர் இறந்தபோது பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷி அமெரிக்காவில் இருந்தார். இவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள ஜெட் விமானத்தில் பறந்து வந்தார். 
 
நிக்கோலா சர்கோஷி கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர். ஆனால் அவரது தாய் மற்றும் அவரது பரம்பரை முழுவதும் யூத மதத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் இந்த Jean-Marie Lustiger இன் உடலை நோர்து-டேம் தேவாலயத்தில் புதைப்பதாக எடுக்கப்பட்ட முடிவிலும் சில சர்ச்சைகள் எழுந்தன. 
 
ஆனாலும், அவற்றையெல்லாம் விடுத்து, இன்று நோர்து-டேம் வளாகத்தில் நிம்மதியாக துயில் கொள்கின்றார் Jean-Marie Lustiger . 
 
இன்றும் பிரான்சில் யூத மதத்துக்கு எதிரான பல சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்றுக்கொண்டுதான் உள்ளன. அவற்றுக்கான ஒரு முடிவு விரைவில் கிட்டும். அதற்கான ஆரம்பமாக Jean-Marie Lustiger  இன் ஆத்மா இருக்கும்.
 
மிகுதி நாளை..!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்