மேற்கத்திய நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்

13 புரட்டாசி 2024 வெள்ளி 08:28 | பார்வைகள் : 6556
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் உக்ரைன் அமைச்சர்கள் சந்திப்பு நிகழ்ந்ததைத் தொடர்ந்து, மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் நேரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் உக்ரைன் அமைச்சர்களின் சந்திப்பு ஒன்று, ரஷ்ய ஜனாதிபதி புடினுடைய கோபத்தை அதிகரித்துள்ளது.
காரணம், அந்த கூட்டத்தில், ரஷ்யாவுக்குள் தொலைதூர ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவதற்காக, பிரித்தானியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அப்படி பிரித்தானியா முதலான நாடுகள், தங்கள் ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யாவைத் தாக்க உக்ரைனுக்கு அனுமதி வழங்குமானால், அந்நாடுகள் நேரடியாக ரஷ்யாவுடன் போரில் ஈடுபடுவது போல் ஆகிவிடும்.
ஆக, பிரித்தானியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த தாக்குவதற்கு உக்ரைனுக்கு அனுமதி வழங்குமானால், போரின் போக்கே மாறிவிடும் என்று புடின் எச்சரித்துள்ளார்.
அதாவது, பிரித்தானியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்னும் பொருளில் எச்சரித்துள்ளார் புடின்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1