Paristamil Navigation Paristamil advert login

2026 FIFA: தகுதி சுற்று போட்டியில் அர்ஜெண்டினா, பிரேசில் தோல்வி - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

 2026 FIFA: தகுதி சுற்று போட்டியில் அர்ஜெண்டினா, பிரேசில் தோல்வி - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

13 புரட்டாசி 2024 வெள்ளி 08:58 | பார்வைகள் : 213


2026 கால்பந்து உலக கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினாவும், 5 முறை சாம்பியனான பிரேசிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

23 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2026 ஆம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் நடைபெறவுள்ளது.

மொத்தம் 48 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டிகளில் போட்டியை நடத்தும் நாடுகளை தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே தேர்வு செய்யப்படும்.

தற்போது தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடக்கின்ற நிலையில் இதில் தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்றில் 10 அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் 2 முறை மோத வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 18 போட்டிகளில் விளையாடப்படும்.

லீக் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெறும். 7 வது இடத்தை பெறும் அணி Play-Off சுற்றில் மோதும். எஞ்சிய 3 அணிகள் வெளியேறும். 

இந்த நிலையில் பரான்கியாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த போட்டியில் கொலம்பியா, 'நம்பர் ஒன்' அணியும், உலக சாம்பியனுமான அர்ஜென்டினாவும் மோதின. 

முடிவில் கொலம்பியா 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.

மற்றொரு ஆட்டத்தில் பராகுவே 1-0 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்தது.  

பராகுவே அணியில் வெற்றிக்குரிய கோலை 20 ஆவது நிமிடத்தில் டியாகோ கோம்ஸ் அடித்தார்.

தொடர்ந்து தடுமாறி வந்த பிரேசில் அணியும் தோல்வியை தழுவியது. 

அத்துடன் 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு பராகுவேயிடம் பிரேசில் தோற்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த பிரிவில் ஒவ்வொரு அணியும் இதுவரை தலா 8 ஆட்டங்களில் விளையாடியுள்ளன.  

அர்ஜென்டினா 18 புள்ளிகளுடன் (6 வெற்றி, 2 தோல்வி) முதலிடத்தில் நீடிக்கிறது.

கொலம்பியா 16 புள்ளிகளுடன் (4 வெற்றி, 4 டிரா) 2-வது இடத்திலும், உருகுவே (15 புள்ளி) 3-வது இடத்திலும், ஈகுவடார் (11 புள்ளி) 4-வது இடத்திலும் உள்ளன. பிரேசில் 10 புள்ளிகளுடன் (3 வெற்றி, ஒரு டிரா, 4 தோல்வி) 5-வது இடத்தில் இருக்கிறது. 

இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி, நெய்மார் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.    

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்