Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் நாட்டுக்கு எதிராக சர்வதேச கைதாணையை நாடும் துருக்கி

இஸ்ரேல் நாட்டுக்கு எதிராக சர்வதேச கைதாணையை நாடும் துருக்கி

13 புரட்டாசி 2024 வெள்ளி 09:22 | பார்வைகள் : 1482


இஸ்ரேல் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட தங்கள் நாட்டு சமூக ஆர்வலர் தொடர்பில் விரிவான விசாரணையை  துருக்கி ஆரம்பித்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்ட சமூக ஆர்வலர் Ayşenur Ezgi Eygi தொடர்பிலேயே துருக்கி விசாரணை முன்னெடுக்க உள்ளது.

சர்வதேச கைதாணையை நாட இருப்பதாகவும் அறிவித்துள்ளது. 26 வயதான Ayşenur Ezgi Eygi துருக்கி மற்றும் அமெரிக்க இரட்டைக் குடியுரிமை கொண்ட சமூக ஆர்வலர்.

Beita பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் இஸ்ரேல் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். 

இதில் துப்பாக்கி குண்டு அவரது தலையில் பாய்ந்தது. 

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலலின்றி மரணமடைந்தார்.

அமெரிக்கா உட்பட பல நாடுகள் இச்சம்பவத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் அவரது இறுதிச்சடங்குகள் வெள்ளிக்கிழமை துருக்கியில் நடத்தப்படும் என்றே கூறப்படுகிறது.

துருக்கியின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவிக்கையில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக அமைதியான ஆர்ப்பாட்டத்தின் போது அவர் இஸ்ரேலிய வீரர்களால் வேண்டுமென்றே குறிவைத்து கொல்லப்பட்டார் என குறிப்பிட்டுள்ளது.

மேலும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும் வரையில் துருக்கி கடுமையாக போராடும் என்றும் தெரிவித்துள்ளது. 

ஆனால் இஸ்ரேல் தரப்பில், துப்பாக்கிச் சூடு நடந்தது உண்மை என்றும், திட்டமிட்டு அவரை கொல்லும் நோக்கம் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது.

துருக்கியிடம் கொலை தொடர்பான ஆதாரங்கள் உள்ளன என்றும் சர்வதேச கைது கோரிக்கைகளை துருக்கி விடுக்கும் என்றும் துருக்கியின் நீதித்துறை அமைச்சர் Yılmaz Tunç தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்