Paristamil Navigation Paristamil advert login

நோர்து-டேம் தேவாலயத்தில் புதைக்கப்பட்டவர்களின் கதை!! (பகுதி 1)

நோர்து-டேம் தேவாலயத்தில் புதைக்கப்பட்டவர்களின் கதை!! (பகுதி 1)

8 வைகாசி 2021 சனி 12:30 | பார்வைகள் : 19626


நோர்து-டேம் தேவாலயம் உலகப்புகழ் பெற்றது. பிரான்சுக்கு வெளியே நீங்கள் இருந்தால்.. கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற தீ விபத்தோடு.. இதன் பெயரை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்புகள் உள்ளது. 
 
தெரியாதவர்களுக்கு ஒரு பத்தி அறிமுகம். தலைநகர் பரிசில் உள்ள இந்த கத்தோலிக்க தேவாலயம் 850 ஆண்டுகள் பழமையானது. பரிசுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பெரிதும் பார்க்க விரும்பும் ஒரு இடம். கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற தீ விபத்தில் இரண்டு மரத்தினால் அமைக்கப்பட்ட கோபுரங்கள் தீக்கிரையாகியிருந்தன. சுபம்!
 
இப்போது விஷயத்துக்கு வருவோம். இந்த நோர்து டேம் தேவாயலத்தின் வளாகத்தில் சில முக்கிய பெரும்புள்ளிகளை புதைக்கவும் செய்துள்ளனர்.  முக்கியமாக இந்த தேவாயலத்தின் பேராயர்கள் பலரை இங்கு புதைத்துள்ளனர். 
 
அவர்களின் கதைகள் இதோ;
 
Denis-Auguste Affre 
 
என்பவர் 1840 ஆம் ஆண்டுகளில் நோர்து-டேம் தேவாயல பேராயராக இருந்தார். 1848 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரம் ஒன்றை இவர் அமைதியாக்க முயன்றபோது, கூட்டத்தில் இருந்த பாதகன் ஒருவன் இவரை துப்பாக்கியால் சுட்டுள்ளான். 
 
தேவாலயத்துக்குள் கொண்டுவந்த சில நிமிடங்களில் அவர் சாவடைந்திருந்தார். பின்னர் அவரது சடலம் நோர்து-டேம் தேவாலய வளாகத்துக்குள் புதைக்கப்பட்டது. 
 
 
St. Hugh 
 
என்பவர் மிக துடிப்பான இளைஞர். தேவாலயத்தில் திருத்தொண்டு ஆற்ற இவர் நியமிக்கப்பட்டார். தேவாலயத்தை துப்பரவு செய்வது உள்ளிட்ட வேலைகளை கவனித்த இவர்.. சில நாட்களிலேயே தேவாலய நிர்வாகத்துக்குள் நுழைந்தார். 
 
கத்தோலிக்க மதத்துக்கு மிகப்பெரும் ஆற்றலும்.. திறமையும் கொண்ட.. ஆழுமைத்திறமை கொண்ட ஒரு பேராயர் தேவைப்படும் ‘சிச்சுவேஷன்’ ஒன்று எழ.. அதை இறுக்கமாக பிடித்துக்கொண்டு பேராயர் ஆனார் திரு. St. Hugh. அப்போது பரிஸ் மட்டுமில்லாது Fontenelle Abbey, Bayeux போன்ற நகரங்களுக்கும் அவர் பேராயராக நியமிக்கப்பட்டதாக வரலாற்று தரவு. இருக்கட்டும். 
 
இதனால் 730 ஆம் ஆண்டு இவர் மரித்துப்போக அவருக்கான இறுதி நிலமாக நோர்து-டேம் தேவாலயத்துக்குள் ஒரு இடம் வெட்டப்பட்டது. 
 
Pierre de Gondi
 
பிரெஞ்சு வரலாற்றில் திரு கோண்டி குடும்பத்தினர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பெரும் செல்வந்தர் குடும்பமான கோண்டி பரம்பரையில் Pierre de Gondi இத்தேவாலயத்தில் புதையுண்டு போனார்.
 
நான்காம் ஹென்றி ஆட்சி காலத்தில் இவர் பரிசின் பாதிரியராக இருந்தார். பிரெஞ்சு கத்தோலிக்க தூதராக ஹென்றி மன்னன் இஅவரை ரோம் நகருக்கு 1595 ஆம் வருடம் அனுப்பி வைத்தார். 
 
போததற்கு 13 ஆம் லூயி மன்னனுக்கே இவர் தான் பாதிரியார். பதின்மூன்றாம் லூயியை எங்கு புதைத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இவரை நோர்து-டேமில் புதைத்தார்கள். 
 
கதைகள் நாளையும் தொடரும்..!!

 

 

 

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்