இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுலாகுமா? வெளியான தகவல்
13 புரட்டாசி 2024 வெள்ளி 10:48 | பார்வைகள் : 12416
எதிர்வரும் 21-ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தும் திட்டம் இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தும் அதிகாரம் ஜனாதிபதியிடம் காணப்படுவதாகவும் ஜனாதிபதி விரும்பினால் ஊரடங்கு சட்டத்தை நடைமுறைபடுத்த முடியும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் தேர்தல்களின் பின்னர் சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

























Bons Plans
Annuaire
Scan