Paristamil Navigation Paristamil advert login

மட்டன் நெய் வறுவல்.

மட்டன் நெய் வறுவல்.

13 புரட்டாசி 2024 வெள்ளி 13:35 | பார்வைகள் : 230


அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று மட்டன். மட்டனை எப்படி செய்து பரிமாறினாலும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் மட்டனை நன்றாக வறுத்து கொடுத்தால் ருசித்து ரசித்து சாப்பிடுவார்கள்.

அதிலும் புதிதாக வறுத்து அரைத்த மசாலாக்களுடன் மட்டனை நெய்யில் வறுத்து சாப்பிட்டால் சொல்லவா வேண்டும் அதன் சுவையை. எனவே சுவையான மட்டன் நெய் வறுவலை ருசியாக வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மரினேட் செய்ய தேவையானவை :

விளம்பரம்

மட்டன் - 1/2 கிலோ

தயிர் - 1/2 கப்

மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

மசாலாவிற்கு தேவையானவை :

கொத்தமல்லி விதைகள் - 2 டீஸ் ஸ்பூன்

பூண்டு பல் - 6

சீரகம் - 1 டீஸ் ஸ்பூன்

வெந்தயம் - 1 டீஸ் ஸ்பூன்

மிளகு - 1 டீஸ் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 6

கிராம்பு - 2

மற்ற பொருட்கள் :

புளி விழுது - 1 டேபிள் ஸ்பூன்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

நுணுக்கிய வெல்லம் - 2 டிஸ் ஸ்பூன்

கறிவேப்பிலை - 2 கொத்து

உப்பு - தேவைகேற்ப

செய்முறை :

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் நன்றாக சுத்தம் செய்த மட்டன், மஞ்சள் தூள், தயிர், எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து பிசைந்து கொள்ளுங்கள்.

இவற்றை குறைந்தபட்சம் 2 மணி நேரம் அறை வெப்பநிலையில் ஊறவைத்து கொள்ளவும்.பிரஷர் குக்கரில் 1/4 கப் தண்ணீருடன் மரினேட் செய்த மட்டனைச் சேர்த்து மூடி அடுப்பில் வேக வைக்கவும்.

குக்கர் 4 விசில் வரும்வரை விட்டு அடுப்பை அணைத்து பிரஷர் தானாக அடங்கும் வரை விடவும். அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து சூடானதும் காய்ந்த மிளகாய், கொத்தமல்லி விதைகள், வெந்தயம், மிளகு, கிராம்பு மற்றும் சீரகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இவற்றை சுமார் 4 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வாசனை வரும் வரை வறுக்கவும்.இவை அனைத்தும் நன்றாக வறுபட்டவுடன் அடுப்பை அனைத்து அவற்றை நன்கு ஆறவிடவும்.அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் பூண்டு, புளி விழுது மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்டாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

தற்போது கடாய் ஒன்றை அடுப்பில் சூடானதும் மிதமான தீயில் நெய் சேர்த்து கொள்ளவும்.அதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அதனுடன் வறுத்து அரைத்த மசாலாவைச் சேர்த்து நெய் மேலே வரும் வரை மிதமான தீயில் சமைக்கவும்.

பின்னர் அதில் வேகவைத்த மட்டனை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள்.கடாயை மூடி குறைந்த தீயில் சுமார் 8-10 நிமிடங்கள் அவற்றை சமைக்கவும்.

மட்டன் மசாலா வறுவல் பதத்திற்கு வந்தவுடன் உப்பு சரிபார்த்து அடுப்பை அணைக்கவும்  சுவையான மட்டன் நெய் வறுவல் சாப்பிட ரெடி…

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்