Paristamil Navigation Paristamil advert login

ஆன் இதால்கோவின் முடிவை வரவேற்றுள்ள ஜனாதிபதி மக்ரோன்!

ஆன் இதால்கோவின் முடிவை வரவேற்றுள்ள ஜனாதிபதி மக்ரோன்!

13 புரட்டாசி 2024 வெள்ளி 17:39 | பார்வைகள் : 7505


2028 ஆம் ஆண்டு இடம்பெற உள்ள அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் வரை ஈஃபிள் கோபுரத்தில் ஒலிம்பிக் வளையங்கள் பொருத்தப்பட்டிருக்கும் என பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ அறிவித்திருந்தார். இந்த கருத்தினை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வரவேற்றுள்ளார்.

”அவற்றை உடனடியாக அகற்றாமல் இருப்பது நல்லது, அவர் சொல்வது சரிதான்” என ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார். அதேவேளை, Tuileries பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள இராட்சத பலூன் அங்கு நிரந்தரமாக நிறுவப்படுமா எனும் கேள்விக்கு பதில் அளித்த மக்ரோன், அதுவும் முழுக்க முழுக்க பரிஸ் நகரபிதாவின் முடிவிலேயே உள்ளது. அவர் இது தொடர்பில் ஆராய்ந்து வருகிறதாக அறிய முடிகிறது. முடிந்தவரை நீண்ட நாட்கள் அவற்றை காட்சிப்படுத்துவதை நான் விரும்புகிறேன்!” என அவர் மேலும் தெரிவித்தார்.

லு பரிசியன் பத்திரிகைக்கு அவர் வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்