Paristamil Navigation Paristamil advert login

Essonne : CRS 3 காவல்துறை வீரர் தற்கொலை..!!

Essonne : CRS 3 காவல்துறை வீரர் தற்கொலை..!!

13 புரட்டாசி 2024 வெள்ளி 18:08 | பார்வைகள் : 5543


Quincy-sous-Sénart (Essonne) நகரில் பணிபுரியும் காவல்துறை வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவ்வருடத்தில் இடம்பெற்ற 13 ஆவது தேசிய காவல்துறை வீரரின் தற்கொலையாகும்.

Compagnie républicaine de sécurité (CRS) வீரர் ஒருவரே தற்கொலை செய்துகொண்டுள்ளார். 44 வயதுடைய அவர் செவ்வாய்க்கிழமை இரவு தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். சடலம் இன்று காலை அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டது.

Montluçon (Allier) நகரில் கடந்தவாரம் 47 வயதுடைய காவல்துறை வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. காவல்துறையினரின் தற்கொலையை தவிர்ப்பதற்காக அரசாங்கம் 3114 எனும் தொலைபேசி இலக்கத்தை அறிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்