அடிப்படைவாதம்... ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த 17 வயது மாணவன் கைது!
14 புரட்டாசி 2024 சனி 10:00 | பார்வைகள் : 1606
ஆசிரியர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 17 வயதுடைய மாணவன் ஒருவர் செப்டம்பர் 12, வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்சின் மேற்கு எல்லை நகரமான Rezé (Loire-Atlantique) இல் உள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். புதன்கிழமை இரவு குறித்த மாணவன் டெலிகிராம் செயலி உடாக ஆசிரியரின் புகைப்படத்தை பகிர்ந்ததோடு, அவர் கொல்லப்படவேண்டியவர் எனவும் செய்தி பகிர்ந்துள்ளார்.
அதை அடுத்து, மறுநாள் வியாழக்கிழமை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தடுப்புப்பிரிவுக்கு விசாரணைகள் மாற்றப்படவில்லை எனவும், குறித்த மாணவன் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.