Rungis சந்தையில் கிடைக்கும் ஐந்து வித பொருட்கள்!

6 வைகாசி 2021 வியாழன் 10:30 | பார்வைகள் : 23617
ஐரோப்பாவின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்று இந்த Rungis சந்தை. Triangle de Gonesse (Val-d'Oise) நகரில் உள்ள இந்த சந்தையில் ஐந்து விதமான பிரிவுகளில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதை சந்தை என சொல்வதை விட “உணவுச் சந்தை” என சொல்லலாம். பிரான்சில் விற்பனைக்கு வரும் நாளாந்த உணவுப்பொருட்கள் அனைத்தும் இங்கிருந்தே வருகின்றன.
பழங்கள், காய்கறிகள்!
ஐந்து பிரிவுகளில் முதலாவது மரக்கறிகளும் பழங்களுமே.. ஐரோப்பியர் பயன்படுத்தும் அனைத்து மரக்கறி வகைகளும் இங்கு காணலாம். வாழைப்பொத்தியும் வாங்கலாம்.. முருக்கங்காயும் வாங்கலாம்.. உருளைக்கிழங்கு, வெங்காயம் அதிகளவில் விற்பனையாகின்றது.
அதுபோன்றே அனைத்து வித பழங்களும் கிடைக்கின்றன.
இறைச்சி!
கண்டைனர் கண்டைனராக வந்து சேரும் இறைச்சி மூட்டைகள் இங்கு வைத்தே பிரிக்கப்பட்டு, நாட்டின் பல பாகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இறைச்சி என்றால்.. தொன் கணக்கில் வரும் எடை!
சுவையான ஆட்டிறச்சி.. கோழி... மாட்டு இறச்சி என உங்கள் ஞாயிறுகளை பதம் பார்க்கும் அனைத்து இறைச்சிகளும் இங்கே எவைலபிள்!
கடலுணவுகள்!
மீன், நண்டு, இறாள், கணவாய் என ஒரு தொகை கடலுணவுகள் இங்கே காட்சிக்குள்ளன. கடலுணவு என்றால்.. இராட்சத இறாள்.. ஆயிரம் கிலோ வரை எடைகொண்ட இராட்சத மீன்கள் எல்லாம் கிடைக்கும். பார்க்கவே ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
பால் பொருட்கள்!
பாலினால் தயாரிக்கப்பட்ட டெய்ரி உற்பத்தைகள் இங்கு சக்கை போடு போடுகின்றன. எது தயிரா..? அட அதுவும் உண்டு.
பூக்கள், தாவரங்கள்!
அதேபோன்று இங்கு பூக்கள், தாவரங்களும் கிடைக்கின்றன. இறைச்சி விற்பனை எப்படி வெற்றிகரமாக இயங்குகின்றதோ.. அதுபோல் தான் பூக்களும். உலகம் முழுவதும் இருந்து கொண்டுவரப்படுகின்ற பூக்கள், தாவரங்கள் அனைத்தும் இங்கிருந்து நாடு முழுவதும் பிரித்து அனுப்பப்படுகின்றன.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1