Paristamil Navigation Paristamil advert login

 2வது டி20யில் இங்கிலாந்து அபார வெற்றி!

 2வது டி20யில் இங்கிலாந்து அபார வெற்றி!

14 புரட்டாசி 2024 சனி 05:52 | பார்வைகள் : 3370


2வது டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து-அவுஸ்திரேலியா இடையிலான 2வது டி20 போட்டி கார்டிஃப்(Cardiff) சோபியா கார்டன்ஸ்(Sophia Gardens) மைதானத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன் மூலம் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் (Jake Fraser-McGurk) மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் (Josh Inglis) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் (Jake Fraser-McGurk) அதிகபட்சமாக  31 பந்துகளில் 50 ஓட்டங்கள் குவித்து இருந்தார்.

இதனால் அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ஓட்டங்கள் குவித்தது.

வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், லியாம் லிவிங்ஸ்டன்(Liam Livingstone) அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

லியாம் லிவிங்ஸ்டன் 47 பந்துகளில் 87 ஓட்டங்கள் குவித்து மிரட்டினர்.

மறுப்புறம் ஜேக்கப் பெத்தேல்(Jacob Bethell) 24 பந்துகளில் 44 ஓட்டங்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றினார். இறுதியில் 19 வது ஓவர் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 194 ஓட்டங்களை இங்கிலாந்து அடைந்தது.

இதன் மூலம் அவுஸ்திரேலிய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்