Paristamil Navigation Paristamil advert login

அடேங்கப்பா... பரிசில் இத்தனை தேநீர் அருந்தகங்களா..??!!

அடேங்கப்பா... பரிசில் இத்தனை தேநீர் அருந்தகங்களா..??!!

5 வைகாசி 2021 புதன் 10:30 | பார்வைகள் : 20060


பரிசில் எத்தனை கஃபேக்கள் உள்ளன என உங்களுக்குத் தெரியுமா..?? இந்த கொரோனா லொக்டவுன்ல கஃபே எல்லாம் எங்க திறக்குது? என சலித்துகொள்ள வேண்டாம்.. தொடர்ந்து படியுங்கள். 
 
தலைநகர் பரிஸ் கஃபே விடுதிகளால் நிரம்பி வழிகின்றது. சுற்றுலாப்பயணிகள் மணிக்கணக்காக கதை பேசி இருந்து அமர்ந்து கஃபே அருந்திவிட்டு செல்ல ஏராளமான கஃபேக்கள் உள்ளன.  தடுக்கி விழுந்து தட்டி எழும்பினால்.. விழுந்தது ஒரு கஃபேயிலும்.. எழுந்தது ஒரு கஃபேயிலுமாக இருக்கும். 
 
இப்படியாக மொத்தம் 5000 கஃபேக்கள் பரிசில் உள்ளன. 
 
அடேங்கப்பா... என ஆச்சரியப்படுகின்றீர்களா.. ஆனால் பிரெஞ்சு மக்களின் கஃபே தாகத்துக்கு இவையெல்லாம் பற்றாது. பாவற்காய் ஜூசை விட படு மோசமான கைய்ப்பு கஃபேக்களையெல்லாம் அநாயமாக குடித்து அசரடிப்பார்கள் இவர்கள். 
 
கஃபேக்களில் மிக முக்கியமானது அதன் ‘தீம்’கள் தான். ஒரு கஃபேயில் பூனைகளாய் நிரம்பி வழியும். அதனை பார்த்துக்கொண்டே அமர்ந்து கஃபே குடிக்கவேண்டும். இன்னொரு கஃபேயில் மோட்டார் சைக்கிளின் பழைய ஸ்பேர் பாட்சுகளாக அடுக்கி வைத்திருப்பார்கள்.. ஒரு கஃபேயில் டாட்டுக்கள் போடும் இடமாக இருக்கும். 
 
இதுபோல் தீம்கள் அதிகம். அதை விட உலகின் மிக நேர்த்தியான.. அனைத்து வித, அனைத்து வெரைட்டி கஃபேக்களையும் கொண்ட நகரமாக பரிஸ் உள்ளது. 
 
எதே லாச்சப்பலில் உள்ள கஃபேயும் லிஸ்டுல சேர்க்கனுமா..?? அட,... அதையும் சேர்த்து தான் இந்த 5000 கஃபே பார்கள்! 
 
ஒரு நாளைக்கு ஒரு பாரில் கஃபே அருந்தினாலும், பரிசில் உள்ள அத்தனை கஃபேக்களிலும் குடித்து முடிக்க உங்களுக்கு 13 ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படும். அடேங்கப்பா!!
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்