ஈஃபிள் கோபுரத்தில் திருமணம் செய்துகொள்ள எவ்வளவு செலவாகும்..??
4 வைகாசி 2021 செவ்வாய் 14:30 | பார்வைகள் : 19297
ஈஃபிள் கோபுரத்தில் திருமண மண்டபம் உள்ளது உங்கள் அனைவருக்கும் தெரிந்தே தான் இருக்கும். ஈஃபிள் கோபுரத்தில் உள்ள மண்டபத்தில் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பது பலருக்கு ஆசையாகவும் உள்ளது. திருமணம் செய்துகொள்ள மண்டப வாடகை எவ்வளவு..?? இன்றைய பிரெஞ்சு புதினத்தில் தெரிந்துகொள்ளலாம்.
அதற்கு முன்பாக சில தகவல்கள்.
உங்களது திருமண அல்லது திருமண வரவேற்பு நிகழ்வு அதிகபட்சமாக 3 மணிநேரத்து மாத்திரமே அனுமதிக்கப்படும். அதிலும் நிகழ்வின் பின்னர் மண்பத்தை துப்பரவு செய்வதற்குரிய காலமும் இந்த 3 மணிநேரத்துக்குள் அடங்கும்.
இந்த காலத்தை நீங்கள் தாண்டினால்.. மீண்டும் அடுத்த 3 மணிநேரத்துக்குரிய பணத்தை செலுத்த நேரிடும்.
இங்கு திருமணம் செய்துகொள்ள தீர்மானித்தால்.. உணவுகளும் இங்கேயே பெற்றுக்கொள்ள வேண்டும். வெளியில் இருந்து கொண்டுவரும் உணவுகளுக்கு தடா!!
அதிலும் இந்த உணவு வகைகளில் ஆசிய உணவுகள் எதுவும் இல்லை.. குறிப்பாக சோறு, கறி.. பிரியாணி.. ம்ம்ஹூம்... எதுவும் இல்லை! (இப்பதான் தெரியுது தமிழாக்கள் ஏன் இங்க கல்யாணம் செய்யிறதில்லை எண்டு!)
மது.. அதுவும் கண்டிப்பாக அங்கேயே தான் வழங்கப்படும். (இடுப்பில் பியர் டின்னை ஒளித்து.. ம்ம்ஹூம்.! நடவாது!)
சிகரெட் புகைப்பதற்கென ஒதுக்கப்பட்டுள்ள அறையில் வைத்து தான் புகைக்க வேண்டும்.
மிக முக்கியமாக சத்தமாக பாட்டுகளை போட்டு, நாலு ஸ்டெப்பை போட்டு டான்ஸ் ஆடுலாம் என்றால்.. நடவாது. DJ வேலைகளுக்கு இங்கு அனுமதி இல்லை. (என்னடாப்பா இது.?)
ஆனால் டான்ஸ் ஏரியா என்று ஒரு பகுதி உங்களுக்கு வழங்கப்படும். அதற்குள் ஒலிபரப்படும் சத்தம் அந்த அறைக்குள் மாத்திரமே கேட்கும். அங்கு சென்று இரண்டு ஸ்டெப்பை போட்டு திருமணத்துக்கு வந்த அந்த அழகான பெண்ணை கவர முயற்சிக்கலாம். (ஆனால் கல்யாணத்தை மூன்று மணிநேரத்துக்குள் மூட்டை கட்ட வேண்டும்!)
கேக் கட்டிங், பிறந்தநாள்.. வெற்றி கொண்டாட்டம் போன்றவற்றுக்கும் அனுமதி உண்டு.
இத்தனை பிச்சல் புடுங்கலுக்கு மத்தியில் ஒரு கல்யாணம் தேவைதானே என்று தானே யோசிக்கின்றீர்கள்...??
சரி.. சரி.. கட்டணம்..? கட்டணம் என்னவோ கொஞ்சம் குறைவுதான்.
யூரோக்களில் ஆரம்பிக்கும் முன்பதிவு, அதிகபட்சமாக யூரோக்கள் வரை செல்கின்றது. வெளியில் உள்ள சில திருமண மண்டபங்களோடு ஒப்பிடுகையில் இது குறைவுதான். ஆனால் மேற்கட்ட ’கட்டுப்பாடுகளையும்’ கருத்தில் கொள்ளவேண்டும்.
யாராச்சும் இங்கு திருமணம் செய்ய தீர்மானித்திருந்தால் பரிஸ்தமிழ் அலுவலகத்துக்கு ஒரு இன்விடேஷனை அனுப்பி வையுங்கள்!