Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியா செல்ல முற்பட்ட 8 அகதிகள் பலி..!!

பிரித்தானியா செல்ல முற்பட்ட 8 அகதிகள் பலி..!!

15 புரட்டாசி 2024 ஞாயிறு 10:51 | பார்வைகள் : 5229


கலே கடற்பிராந்தியம் வழியாக பிரித்தானியா நோக்கி செல்ல முற்பட்ட எட்டு அகதிகள் பலியாகியுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை இரவு இச்சம்பவம் 
Ambleteuse (Pas-de-Calais) நகர கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது. சிறிய படகு ஒன்றில் அளவுக்கதிகமான அகதிகளை ஏற்றிக்கொண்டு சட்டவிரோத பயணம் மேற்கொண்ட படகு ஒன்று கடலில் கவிழ்ந்துள்ளது. கடலில் மூழ்கியவர்களை சட்டவிரோத கடற்பயணங்களை கண்காணிக்கும் CROSS (Centres régionaux opérationnels de surveillance et de sauvetage) எனும் அமைப்பினர் மீட்டனர். 

கடலில் மூழ்கி எட்டு பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10 மாத குழந்தை ஒன்று உயிருக்காபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருட ஆரம்பத்தில் இருந்து இதுவரை 46 அகதிகள் இதுபோன்ற சட்டவிரோத பயணங்களினால் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்