Paristamil Navigation Paristamil advert login

பரிசில் மிக ஆழத்தில் உள்ள மெற்றோ நிலையம் எது..?!

பரிசில் மிக ஆழத்தில் உள்ள மெற்றோ நிலையம் எது..?!

3 வைகாசி 2021 திங்கள் 14:30 | பார்வைகள் : 24011


தலைநகர் பரிஸ் நிலத்துக்கு மேலே பாதி உள்ளதென்றால், நிலத்துக்கு கீழே மீதி உள்ளது. பரிசில் உள்ள மெற்றோ நிலையங்களில் மிக ஆழத்தில் உள்ள மெற்றோ நிலையம் எது தெரியுமா..??!
 
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தின் Montmartre பகுதியில் உள்ள Abbesses நிலையமே அது. இதுவே மிக மிக ஆழத்தில் உள்ள மெற்றோ நிலையமாகும். 
 
கிட்டத்தட்ட நூற்றாண்டு கால பழமையானது இந்த மெற்றோ நிலையம். தற்போது 12 ஆம் இலக்க மெற்றோக்கள் பயணிக்கும் இந்த நிலையம் 1913 ஆம் வருடம் ஜனவரி 30 ஆம் திகதி திறக்கப்பட்டது. 
 
முதலில் A வழி தொடருந்துகள் இயக்கப்பட்ட இந்த நிலையம், பின்னர் 12  ஆம் இலக்க மெற்றோ நிலையமாக மாறியது. 
 
அதெல்லாம் இருக்கட்டும்... இந்த நிலையம் நிலமட்டத்தில் இருந்து எவ்வளவு ஆழத்தில் உள்ளது? 
 
36 மீற்றர் ஆழத்தில் இந்த நிலையம் உள்ளது. கிட்டத்தட்ட 118 அடி ஆழம். 
 
அடேங்கப்பா... நூறு வருஷம் முன்னாடியே இவ்ளோ தோண்டியிருக்காங்களே என்றுதானே யோசிக்கின்றீர்கள்..?? 

வர்த்தக‌ விளம்பரங்கள்