Paristamil Navigation Paristamil advert login

அஜித்தை திடீரென சந்தித்த நெல்சன்..

அஜித்தை திடீரென  சந்தித்த நெல்சன்..

15 புரட்டாசி 2024 ஞாயிறு 14:22 | பார்வைகள் : 4780


இயக்குனர் நெல்சன் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’ஜெயிலர் 2’ படத்தை இயக்க இருக்கும் நிலையில் திடீரென அவர் அஜித்தை சந்தித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நெல்சன் இயக்கத்தில் அஜித் ஒரு டார்க் காமெடி படத்தில் நடிக்க இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

நடிகர் அஜித் தற்போது ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் இந்த படங்கள் இந்த ஆண்டு தீபாவளி மற்றும் அடுத்த ஆண்டு பொங்கல் என அடுத்தடுத்து வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் அஜித்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் சந்தித்துள்ளார். அவருடன் நடிகர் கவின் உடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அஜித் ,நெல்சன், கவின் ஆகிய மூவரும் ஒரு டார்க் காமெடி படத்தில் இணைவார்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ஒருவேளை இப்படி ஒரு படம் உருவானால் அது அஜித் ரசிகர்களுக்கு கொண்டாடும் ஒரு படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்