பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையலாம் - ரணில் எச்சரிக்கை
15 புரட்டாசி 2024 ஞாயிறு 14:42 | பார்வைகள் : 1772
இலங்கையின் தற்போதைய பொருளாதார முன்னேற்றம் பாராட்டுக்குரியது.ஆனால் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகளின்படி செயற்படாவிட்டால் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையலாம் என சர்வதேச நாணய நிதியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை பாதுகாத்து தொடர்ந்து முன்னெடுப்பது அனைவரினதும் பொறுப்பு என யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் இன்று (14) நடைபெற்ற “ரணிலால் இயலும் ” வெற்றிப் பேரணியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் எமது யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் சிலிண்டர் சின்னத்தை வெல்ல வைப்பார்கள் என்பது உறுதி என்று முன்னாள் யாழ். மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்ற 'ரணிலால் இயலும்' பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.