தனிப்பட்ட தகராறு - இலங்கையில் மனைவியை கொலை செய்த கணவர் கைது

15 புரட்டாசி 2024 ஞாயிறு 15:19 | பார்வைகள் : 5812
தனிப்பட்ட தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
நேற்று மாலை வாத்துவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொதுப்பிட்டிய பிரதேசத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கோரகஹவத்த, பொதுப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.
பெண் ஒருவர் தனது கணவரால் தாக்கப்படுவதாக 119 தகவல் நிலையத்தின் மூலம் வாத்துவ பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன்படி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்தததை அவதானித்ததுடன், மற்றுமொரு பெண் காயமடைந்து களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொலையை செய்த 34 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.