பனாமா கால்வாய்க்கு அஸ்திவாரம் போட்ட பிரான்ஸ்..!! (குறுந்தொடர்.. 04)
18 சித்திரை 2021 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 19770
பனாமா கால்வாய் ஒருவழியாக திறக்கப்பட்டது. யாரும் திரும்பிப்பார்த்திராத பனாமா எனும் நாட்டுக்கு, இன்றைய திகதியில் பாரிய வருவாய் இந்த கால்வாய் மூலம் வருகின்றது.
தற்போது 160 நாடுகள் இந்த பனாமா கால்வாயை பயன்படுத்துகின்றது. 1700 சொச்சம் துறைமுகங்களை இது இணைக்கின்றது. வருடத்துக்கு 14,000 கப்பல்கள் இதன்வழியாக பயணிக்கின்றது.
மொத்த தூரம் 77 கிலோமீற்றர்கள்.
இந்த கால்வாய்க்கு நடுவே கடல் மட்டத்தில் இருந்து 85 அடி உயரத்தில் காடன் ஏரி என அழைக்கப்படும் பெரும் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மிதந்து தான் மீதி பயணத்தை கப்பல் மேற்கொள்ளவேண்டும்.
இந்த 85 அடி உயரத்தை கப்பல் எப்படி அடைகிறது,..??
மனிதகுலம் கண்டிராத மிகப்பெரிய தொழில்நுட்பம் இந்த நூற்றாண்டில் உதித்தது.
“வோட்டர் லொக்’ என அழைக்கப்படும் ஒரு பகுதி இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வோட்டர் லொக் (WATER LOCK) 110 அடி அகலமும் 1050 அடி நீளமும் கொண்ட ஒரு நீர்த்தொகுதி. கிட்டத்தட்ட ஒரு இராட்சத ஸ்மிங்க் பூல் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
இதுபோல் அருகருகே மூன்று வோட்டர் லொக் (அதான்.. ஸ்விமிங் பூல்...) அமைக்கப்பட்டுள்ளன.
கடலில் இருந்து கப்பல் இந்த முதலாவது வோட்டர் லொக்கிற்கு செல்லும். அங்கு போய் தரித்து நிற்கும். இப்போது வொட்டர் லொக்கில் உள்ள தண்ணீர் மட்டம் உயர்ந்துகொண்டு வரும்.
தண்ணீர் மட்டம் உயர... கப்பலும் உயரும். தண்ணீர் மட்டம் உயர்ந்து, இரண்டாவது வோட்டர் லொக்குடன் இணையும். இப்போது கப்பல் கொஞ்சதூரம் பயணித்து இரண்டாவது வோட்டர் லொக்கை வந்தடையும்.
முன்பு நடந்ததை போல்... மீண்டும் தண்ணீர் மட்டம் உயர.. கப்பல் உயர... மீண்டும் பயணித்து மூன்றாவது வோட்டர் லொக்கை வந்தடையும் கப்பல்.
இப்போது கடல் மட்டத்தில் இருந்து கப்பல் ஏரியின் உயரத்தை தொட்டுவிடும். கால்வாயில் பயணித்து.. ஏரியை கடந்து.. மீண்டும் மறு கரையில் உள்ள வோட்டர் லொக்குகள் மூலம் கீழே இறங்கி.. கடலில் சேர்ந்து.. பயணத்தை தொடரும்.
வாவ்வ்வ்வ் ல..???
இத்தனை சிரமம் தேவை தானா.. என நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த தொழில்நுட்பம் தான் மட்டையை பிய்க்கிறே தவிர.. இதனை நீங்கள் நேரில் பார்த்தால் உங்களுக்கு ஒரு வித்தியாசமும் தெரியாது.
இத்தனை பாடு பட்டு நீங்கள் பனாமா கால்வாயை கடந்தால், கிட்டத்த 7,872 கடல் மைகள் தூரத்தை நீங்கள் சேமித்து விடுவீர்கள்.
ஆச்சரியம் தான் இல்லையா..??
இந்த தொழில்நுட்பத்துக்கும் பிரான்சுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஆனால் விதை யார் போட்டது... பிரான்ஸ் போட்டது. இருக்கட்டும்.
****
மேலதிக தகவல்கள்.
இன்றைய திகதியில் இந்த வோட்டர் லொக் எல்லாம் ஒரு விஷயமே இல்லை. உலகம் முழுவதும் இந்த வோட்டர் லொக்குகள் குவிந்துள்ளன.
உதாரணத்துக்கு Caen Hill Locks எனும் கால்வாய் இரண்டு மைல் தூரம் மாத்திரமே நீளம் கொண்டவை. ஆனால் அது 237 அடி உயரவேண்டும். இந்த இரண்டு மைல் தூரத்தில் 29 வோட்டர் லொக்குகள் அமைக்கப்பட்டு இந்த உயரத்தை அநாயசமாக கடக்கின்றது.
இதுவரையில் பனாமா கால்வாயில் பயணிக்க அதிக வரி செலுத்தியது கிரவுன் பிரின்ஸ் எனும் கப்பல் ஆகும். $144,344 டொலர்களை அள்ளி கொட்டியுள்ளது. மிகக்குறைந்த வரி கட்டியவர் Richard Halliburton எனும் நீச்சல் வீரர் ஆவார். இவர் முதன் முதலாக இந்த ஏரியை நீந்தி கடந்தார். இதற்காக இவர் $0.36 டொலர்களை வரியாக கட்டினார்.
(முற்றும்)