பனாமா கால்வாய்க்கு அஸ்திவாரம் போட்ட பிரான்ஸ்..!! (குறுந்தொடர்.. 03)
17 சித்திரை 2021 சனி 10:30 | பார்வைகள் : 19738
பல மில்லியன் யூரோக்கள் பணத்தை கொட்டியும் வேலை நடைபெறவில்லை.
கால்வாய் வெட்டும் பணி தொடர்ந்துகொண்டு தான் இருந்தது.
ஆனால் தொடர்ந்து பணியாட்கள் சாவடைந்துகொண்டே இருந்தனர். சாவை மட்டும் கட்டுப்படுத்த முடியவில்லை.
பத்து ஆண்டுகள் ஓடிப்போயின... 50.000 தொழிலாளர்களில் கிட்ட்டத்தட்ட 25000 தொழிலாளர்கள் சாவடைந்திருந்தனர். அட... நீங்கள் வாசித்தது சரி தான்... இருபத்தி ஐந்தாயிரம் பணியாளர்களை காவு வாங்கியது இந்த கால்வாய்... 70 கோடி தொன் எடைகொண்ட மண் வெட்டி அகற்றப்பட்டது.
இதற்கிடையில் பொறியாளர் Jules Dingler இன் குடும்பத்தில் எஞ்சியிருந்த அவரது மருமகனும் சாவடைந்தார். இதனால் Jules Dingler, தீவிர மன உளைச்சலுக்கு ஆளானார்.
ஊழியர்கள் சாவு, பொறியாளர்கள் சாவு, குடும்பத்தினர் சாவு என உயிர்கள் பறிபோய்க்கொண்டே இருக்க, அவர் பனாமாவில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் பிரான்சுக்கு வந்தடைந்தார்.
1881 ஆம் வருடத்தில் இருந்து 1894 ஆம் ஆண்டு வரை இந்த பனாமா கால்வாய் கட்டும் பணியை பிரெஞ்சு அரசு மேற்கொண்டிருந்தது.
******
இப்போது பனாமா கால்வாய் நிறைவு பெற பெரும் தூரம் மிச்சம் இருந்தது.
ஒருகட்டத்தில் சோர்வடைந்த பிரெஞ்சு அரசு.. <<ஆள விடுடா சாமி!>> என பின்னடித்தது. இந்த பனாமா கால்வாய் அமைக்கும் திட்டத்தில் இருந்து நாம் வெளியேறுகின்றோம் என அறிவித்துவிட்டு, திட்டத்தை கை விட்டது.
பனாமா கால்வாய் அமைக்கும் பணியை பின்னர் அமெரிக்கா தொடர்ந்தது. ஒருவழியாக 1914 ஆம் ஆண்டு பனாமா கால்வாய் கட்டி முடிக்கப்பட்டது. அவ்வருடம் ஓகஸ்ட் 15 ஆம் திகதி கால்வாய் திறக்கப்பட்டது.