Caf தொகை வழங்கப்படுவதில் திகதி மாற்றம்..!

17 புரட்டாசி 2024 செவ்வாய் 02:01 | பார்வைகள் : 15393
மாதாந்தம் 5 ஆம் திகதி வழங்கப்படும் குடும்பநல உதவிகள் (Caisse des Allocations familiales) வரும் ஒக்டோபர் மாதத்தில் ஒருநாள் முன்னதாக வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் இந்த தொகை 5 ஆம் திகதி தானியங்கி முறையில் வங்கிகளில் வைப்புச் செய்யப்படும். அன்றைய நாள் ஞாயிற்றுக்கிழமையாக இருக்கும் பட்சத்தில் மறுநாள் திங்கட்கிழமை வைப்புச் செய்யப்படும். இம்முறை ஒக்டோபர் 5 ஆம் திகதி சனிக்கிழமை வருவதால், வார இறுதிநாட்களில் பணப்பரிவர்த்தனை இடம்பெறாமல், இருநாட்கள் தாமதமாக திங்கட்கிழமையே இந்த தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
ஆனால் 48 மணிநேரம் தாமதாக வழங்கும் முடிவை மறுபரிசீலினை செய்து , இம்மாத ஒக்டோபரில் ஒரு நாள் முன்பாக 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமையே பணம் வைப்பிலிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1