பனாமா கால்வாய்க்கு அஸ்திவாரம் போட்ட பிரான்ஸ்..!! (குறுந்தொடர்.. 01)
15 சித்திரை 2021 வியாழன் 10:30 | பார்வைகள் : 19679
பனாமா கால்வாய் (Canal de Panamá) குறித்த சில முக்கிய தகவல்களை 'குறுந்தொடர்' மூலம் பிரெஞ்சு புதினத்தில் பார்க்கலாம்..
பனாமா கால்வாய் என்பது 'பனாமா' நாட்டில் அமைக்கப்பட்ட ஒரு மிக நீண்ட கால்வாய் ஆகும். ஒரு கால்வாய் அமைப்பதில் இத்தனை பிச்சல் புடுங்கல் வருமா என திகைக்க வைத்த வரலாறு கொண்டது இந்த பனாமா கால்வாய்.
பனாமா எனும் நாடு மெக்ஸிக்கோவுக்கும், கொலம்பியாவுக்கும் நடுவே உள்ளது. இரண்டு நாடுகளையும் இணைத்து கயிற்றால் முடிந்தது போன்று ஒரு மெல்லிய, நீளமான நாடு.
வடக்கு அத்லாண்டிக் பெருங்கடலையும், கிழக்கு அத்லாண்டிக் பெருங்கடலையும் ஒன்று சேர விடாமல் 'கோதாவரி.. குறுக்க கோடு கிழி' எனும் கணக்காய் இடைமறித்து இருந்தது இந்த நாடு.
சிக்கல் என்னவென்றால், இப்பகுதிகளில் உள்ள நாடுகள் எல்லாம் தங்கள் வணிகங்களை மேற்கொள்ள கடல் மார்க்கமாய் செல்ல பெரும் பாடு பட்டன.
முக்கியமாக, பொருளாதாரத்தில் வேகமாக வளர்ச்சிகண்டுவந்த அமெரிக்கா, இந்த கப்பல் போக்குவரத்தில் பெரும் பாடு பட்டது.
அமெரிக்காவின் மெக்ஸிக்கோவில் இருந்து, டெக்ஸாஸ் மாநிலம் செல்ல... தேவையில்லாமல் பெரு, அர்ஜண்டீனா தொடங்கி பிரேஸில் கடற்பிராந்தியம் முழுவதையும் அளக்கவேண்டி இருந்தது.
உதாரணத்துக்கு பரிசில் இருந்து Bordeaux நகருக்கு கடல்மார்க்கமாக செல்ல, நீங்கள் எங்கெல்லாம் சுற்றவேண்டும்..?? இதுவே நாட்டை இரண்டாக பிளப்பது போல் குறுக்கே ஒரு கால்வாய் அமைத்தால்..??
நேர விரயம், பண விரயம் எல்லாவற்றையும் தவிர்க்கலாம் இல்லையா??
அப்படி பனாமா நாட்டை 'பிலாப்பழம் பிளப்பது போல்' பிளந்து, குறுக்கே ஒரு கால்வாயை வெட்டி கப்பல் போக்குவரத்தை அதன் வழியாக விட்டால் எவ்வளவு கால, நேர பண விரயம் மிச்சமாகும்..??
இது தான் பனாமா கால்வாய் திட்டம்.
அதெல்லாம் சரிதான்... இதற்கும் பிரான்சுக்கும் என்ன சம்மந்தம்..??
இருக்கு... தரமான சம்பவம் இருக்கு...
(நாளை...)