Paristamil Navigation Paristamil advert login

பறவைகளின் கூட்டை சேதப்படுத்திய பெண் ஒருவருக்கு தண்டனை..!

பறவைகளின் கூட்டை சேதப்படுத்திய பெண் ஒருவருக்கு தண்டனை..!

17 புரட்டாசி 2024 செவ்வாய் 16:18 | பார்வைகள் : 2312


பறவைகளின் கூடு ஒன்றை சேதப்படுத்திய பெம் ஒருவருக்கு Créteil நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

Val-de-Marne மாவட்டத்தின் La Queue-en-Brie நகரில் வசிக்கும் 53 வயதுடைய பெண் ஒருவருக்கே இன்று செவ்வாய்க்கிழமை காலை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சென்ற 2023 ஆம் ஆண்டு அவரது வீட்டின் கராஜ் பகுதியில் 'பாடும் பறவை' என சொல்லப்படும் 'd'hirondelles' பறவையின் கூடு ஒன்றை குறித்த பெண் சேதப்படுத்தியுள்ளார்.

குளிர்காலத்துக்கு என குறித்த பறவைகளினால் உருவாக்கப்படும் அக்கூட்டினை சேதப்படுத்தி பறவைகளை துரத்தியுள்ளார். இச்செயல் அப்பகுதிகளில் பரவி, இறுதியாக பறவைகள் காப்பகம் ஒன்றுக்குச் சென்றடைய, அவர்கள் இதனை நீதிமன்றுக்கு இழுத்துள்ளனர்.

பறவைகள் குறித்து இரக்கம் காட்டாத அவருக்கு அதே இடத்தில் 10 செயற்கை கூடுகளை அமைக்க வேண்டும் எனவும், அவருக்கு €5,000 யூரோக்கள் குற்றப்பணமும் அறவிட்டு தண்டனை விதித்தது நீதிமன்றம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்