பரிசில் மிக மெதுவாக பயணிக்கும் மெற்றோ எது தெரியுமா..??!
1 தை 2021 வெள்ளி 10:30 | பார்வைகள் : 23912
பரிசில் வெவ்வேறு மெற்றோக்களை நீங்கள் பயன்படுத்தியிருப்பீர்கள். அண்மையில் கூட 14 ஆம் இலக்க புதிய மெற்றோவினை RATP அறிமுகப்படுத்தியிருந்தது.
சரி, இந்த மெற்றோக்களில் மிக மெதுவாக பயணிக்கும் மெற்றோ எது தெரியுமா??
நான்காம் இலக்க மெற்றோ. இது தான் பரிசில் உள்ள மெற்றோக்களிலேயே மிகவும் 'ஸ்லோ' !!
14 ஆம் இலக்க புதிய மெற்றோ மணிக்கு 40 கி.மீ வேகத்தில் பயணித்தால், 4 ஆம் இலக்க மெற்றோ அதில் பாதியாக மணிக்கு வெறும் 20 கி.மீ வேகத்தில் மாத்திரமே பயணிக்கின்றது.
4 ஆம் இலக்க மெற்றோவில் ஆண்டுக்கு 171,000,000 பேர் சராசரியாக பயணிக்கின்றனர். மொத்தமாக 27 நிலையங்களை இது இணைக்கின்றது.
4 ஆம் இலக்க மெற்றோவின் மொத்த தூரம் எவ்வளவு தெரியுமா? 12.1 கிலோ மீற்றர்கள்.
4 ஆம் இலக்க மெற்றோவில் வேலைக்குச் செல்பவர்களை நினைத்தால் தான் கவலையாக உள்ளது!


























Bons Plans
Annuaire
Scan