Val-d’Oise : விஷவாயு தாக்கி பலி.. - தம்பதிகள் இருவரது சடலங்கள் மீட்பு! -
.jpg)
17 புரட்டாசி 2024 செவ்வாய் 20:00 | பார்வைகள் : 8440
Enghien-les-Bains (Val-d'Oise) நகரில் உள்ள வீடொன்றில் இருந்து 28 மற்றும் 29 வயதுடைய தம்பதிகள் இருவரது சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
செப்டம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுவாசிக்க ஏற்றதற்ற monoxyde de carbone விஷவாயுவை சுவாசித்து இருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவரது வீட்டில் குடியிருக்கும் ஒருவர் உதவிக்குழுவை அழைத்து தகவல் தெரிவித்ததை அடுத்து இரு சடலங்களும் மீட்கப்பட்டது.
உடற்கூறு பரிசோதனைகளில் அவர்களது மரணத்திற்கான காரணம் கண்டறியப்பட்டது.
அவர்களது வீட்டில் 600 ppm அளவுடைய நிறமற்ற மற்றும் மணமற்ற monoxyde de carbone பரவியிருந்ததாகவும், அதன் காரணமாக இருந்த இடத்திலேயே மூச்சடைத்து மரணம் சம்பவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றில் கலந்துள்ள 0.2 ppm எனும் அளவு monoxyde de carbone ஆபத்தற்றது எனவும், 600 ppm அளவானது உடனடி மரணத்தை ஏற்படுத்தும் எனவும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
*ppm எனும் அளவானது மில்லியனில் ஒரு பகுதி (part par million) ஆகும்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3