ரஷ்ய ஆயுதக் கிடங்கு மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்
19 புரட்டாசி 2024 வியாழன் 09:02 | பார்வைகள் : 1888
ரஷ்யாவின் ஆயுத கிடங்கு மீது உக்ரைன் மிகப்பாரிய ஆளில்லா விமான (drone) தாக்குதலை நடத்தியுள்ளது.
ரஷ்யாவின் ட்வெர் பிராந்தியத்தில் இந்த தாக்குதல் நடந்ததாக உக்ரைனின் அரசு பாதுகாப்பு சேவையை தெரிவித்துள்ளது.
பல ஏவுகணைகள், குண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் இங்கு அழிக்கப்பட்டன.
உக்ரைனின் இந்த ட்ரோன் தாக்குதல் டோரோபெட்ஸ் நகரில் உள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் முக்கிய ஆயுதக் கிடங்கில் ஒரு பாரிய வெடிப்பை ஏற்படுத்தியது.
தாக்குதலுக்குப் பிறகு, 6 கி.மீ பரப்பளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இந்த காலகட்டத்தில் லேசான அதிர்வுகளும் உணரப்பட்டன.
ஆளில்லா விமானத் தாக்குதல் நடந்த இடத்தில் ரஷ்யாவின் சொந்த ஆயுதங்களுக்கு மேலதிகமாக வட கொரியாவின் ஏவுகணைகளும் இருந்ததாக உக்ரைன் அதிகாரி ஒருவர் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் உளவுத்துறை மற்றும் சிறப்பு நடவடிக்கை படைகள் இந்த தாக்குதலை நடத்தின.
ஒரே இரவில் 54 உக்ரைன் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த தாக்குதலால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.