கணவரை விட்டு மனைவி பிரியாமல் இருக்க சில டிப்ஸ்....
19 புரட்டாசி 2024 வியாழன் 10:21 | பார்வைகள் : 1357
கணவன் மனைவி ஒருவரை ஒருவர் நேசிப்பது மிகவும் எதார்த்தமான இயற்கையாகவே நடக்கும் நிகழ்வு. அவர்களுக்குள் இருக்கும் காதல், மற்றும் புரிதலுக்கு ஏற்றார் போல் அவர்கள் வாழ்க்கையும் அமையும். கணவரை எல்லா மனைவியும், மனைவியை எல்லா கணவரும் என எப்போதும் நேசிப்பார்கள். இந்த செயல்கள் தான் என் கணவர் மீது இருக்கும் அன்பை அதிகரிக்க அல்லது மனைவியின் கவனத்தை ஈர்க்கும் என்று எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்கலாம் .
எப்போதும் நாம் ஒருவரை நேசித்து கொண்டே இருக்க முடியாது. சிறு சிறு மனக்கசப்பு ஏற்படும் போது, அவர்களின் மீது இருக்கும் அன்பை மறந்து விடுவோம். இது நாளடைவில் பெரிதாகும் போது அது நிரந்தர பிரிவுக்கு வழிவகுக்கும். இந்த நிலையில் திருமண கவுன்சிலர் கஸ்தூரி அவரின் அனுபவத்திலிருந்து எந்தெந்த தருணங்களில் மனைவிகள் தங்கள் கணவரை அதிகம் நேசிக்கிறார்கள் என்று நம்மிடம் பகிர்ந்துள்ளார். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
குழந்தைகளின் நாப்கின்களை மற்றும் பொழுது
உங்கள் வீட்டில் இருக்கும் அழகான சுட்டி குழந்தைகள் அவர்கள் மீது ஈரம் பட்டதும் அழத் துவங்கிவிடுவார்கள். இது குழந்தை பிறந்தது முதல் அவர்கள் குறிப்பிட்ட வயதை அடையும் வரை தொடரக் கூடிய ஒன்று. நீங்கள் ஓய்வில் இருக்கும் போதோ அல்லது வேறு வேலையில் இருக்கும் போதோ நீங்கள் சொல்லாமலே குழந்தையின் ஈரமான துணி அல்லது நாப்கின்களை அகற்றி புதிய ஒன்றை மாற்றுவது. குழந்தையின் நாப்கின் ஈரமாக இருப்பதை அறிந்து, உங்களை அழைக்காமல் அவரே மாற்றும் போதும், மோசமான துர்நாற்றத்தில் இருந்தும் உங்கள் குழந்தையை பாதுகாக்கும் போதும் நிச்சயம் கணவரின் மீதான அன்பை இது அதிகரிக்கும்.
குழந்தையுடன் விளையாடும் பொழுது
நீங்கள் பார்க்கும் பொழுது உங்கள் கணவர் குழந்தையை தான் முதுகின் மேல் வைத்து சவாரி செய்வது, வேலை முடிந்து சோர்வுடன் வரும் போதும் குழந்தையுடன் விளையாட நேரம் ஒதுக்குவது, குழந்தையுடன் சிறிது தூரம் நடைப்பயிற்சி செய்வது மற்றும் குழந்தை உங்கள் கணவரின் விரல்கள், கணங்களை பற்கள் இல்லாத செவ்விதழ் வாயால் கடிக்க முயற்சிப்பது போன்றவற்றை பார்த்தால் உங்கள் அன்பு அதிகரிக்கும். நீங்கள் எவ்வளவு அதிஷ்டசாலி என்று உணர்வீர்கள்.
நடு இரவில் குழந்தை அழும் போது கவனித்து கொள்வது
நீங்கள் வேலைகளை எல்லாம் முடிந்து கொண்டு அப்போது தான் உறங்க துவங்கி இருப்பீர்கள். ஆனால் உங்களின் சிறிய பொக்கிஷம் உங்களை தூங்க விடாது, அப்பொழுது அவர்கள் அழத் தொடங்குவார்கள். அப்போது உங்கள் கணவர் உங்களை எழுப்பாமல் குழந்தையின் அழுகையை நிறுத்தி தூங்க வைக்க முயற்சி செய்து கொண்டிருப்பார். நீங்கள் அந்த நேரத்தில் திருமண வாழ்வின் உன்னதத்தை புரிந்து கொள்வீர்கள்.
குழந்தையை கவனித்து கொள்ளும் போது
நீங்கள் உங்கள் தோழிகளை சந்திக்க சென்றாக வேண்டும். கட்டாயம் சென்றே ஆக வேண்டும் எனும் சூழ்நிலை. ஆனால் நீங்கள் உங்கள் குழந்தையையும் கவனித்து கொள்ள வேண்டும். அப்போது உங்கள் கணவர் அவர் குழந்தையை கவனித்துக் கொள்வதாக சொல்லி உங்களை தோழிகளை பார்க்க அனுப்பி வைத்தால், உங்கள் கணவரை விட்டு பிரிய உங்களுக்கு மனமே வராது. நீங்கள் வெளியே சென்றாலும் உங்கள் நினைவில் உங்கள் கணவரும் குழந்தையும் மட்டுமே இருப்பார்கள்.
உங்கள் கணவர் மரியாதைக் கொடுக்கும் போது
நீங்கள் உங்கள் குழந்தையின் மிக சிறந்த தாய். நீங்கள் குழந்தையும் குடும்பத்தையும் சரிவர கவனிக்கிறீர்கள். உங்களை மிகவும் வாஞ்சையுடன் பார்த்து கொள்ளும் போது, உங்களை உங்கள் குழந்தையின் தாயாக மதிக்கும் பொழுது, அவர் உங்களிடம் அதிகப்படியான அன்பு செலுத்தும் பொழுதெல்லாம், உங்கள் காதல் மெருகேற்றப்படுவது போல இருக்கும்.
இப்படி ஒரு கணவர் உங்களுக்கு கிடைத்திருந்தால் பாராட்டுக்கள். அருமையான கணவர் உங்களை நேசிக்கும் கணவரை அடைத்திருக்கிறீர்கள், அதற்கு நீங்கள் கர்வமே கொள்ளலாம். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பதை போல, நல்ல கணவன் அமைவதற்கு பெண்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.