தானிய உற்பத்தியாளர்களுக்கு €2,000 யூரோக்கள் வரை உதவி..!
19 புரட்டாசி 2024 வியாழன் 15:24 | பார்வைகள் : 2523
இல் து பிரான்சுக்குள் தானிய உற்பத்திகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு €2,000 யூரோக்கள் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இல் து பிரான்சுக்குள் வசிக்கும் 80% சதவீதமான விவசாயிகள் சென்றவருடம் பெரும் பாதிப்புக்களைச் சந்தித்திருந்தனர். போதிய மழை பதிவாகாத காரணத்தினால் ஏற்பட்ட வறட்சியில் தானிய உற்பத்தி பெரும் பாதிப்புக்குள்ளாகியது. முந்தைய வருடத்தோடு ஒப்பிடுகையில் 20% சதவீத உற்பத்தி வீழ்ச்சியடைந்திருந்தது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, €5.5 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு €1,500 இல் இருந்து €2,000 யூரோக்கள் வரை உதவித்தொகை வழங்க உள்ளதாக இல் து பிரான்ஸ் மாகாணசபை அறிவித்துள்ளது.