Paristamil Navigation Paristamil advert login

தனுஷின் அடுத்த படத்தின் பெயர் 'இட்லி கடை'

தனுஷின் அடுத்த படத்தின் பெயர் 'இட்லி கடை'

19 புரட்டாசி 2024 வியாழன் 15:37 | பார்வைகள் : 189


தனுஷ் இயக்கத்தில் உருவாகும் நான்காவது படம் மற்றும் அவர் நடிக்கும் 52வது படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், சற்றுமுன் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தனுஷ் நடித்த 50வது திரைப்படம் ’ராயன்’ மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அவர் நடிக்கும் 51 வது படமான ‘குபேரா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தனுஷ் நடிக்கும் 52 வது திரைப்படத்தை அவரே இயக்க இருப்பதாக செய்தி வெளியானது ’பா பாண்டி’, ’ராயன்’, ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ ஆகிய படங்களை அடுத்து, தனுஷின் நான்காவது இயக்கம் இந்த படம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனுஷின் படத்தை அறிவித்த நிலையில், தற்போது ‘இட்லி கடை’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும், ஒளிப்பதிவில் பிரசன்னா ஜேகே, படத்தொகுப்பில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து, தயாரிக்க உள்ளதாகவும், இப்படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்