வவுனியா, ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் மரணம்

19 புரட்டாசி 2024 வியாழன் 16:32 | பார்வைகள் : 4204
வவுனியா, ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய வீரசிங்கம் ஜனிதரன் மற்றும் ஓமந்தை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சண்முகராஜா யோகராசா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் வந்த துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் மற்றும் துவிச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் படுகாயமடைந்து பிரதேசவாசிகளால் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.