'Laboratoires d'analyses médicales' நாடுமுழுவதும் மூடப்பட்டுள்ளது.
20 புரட்டாசி 2024 வெள்ளி 09:30 | பார்வைகள் : 3823
மருத்துவ உயிரியல் பகுப்பாய்வு ஆய்வகங்கள்
(Laboratoires d'analyses médicales) ஏறத்தாழ நாடுமுழுவதும் திங்கள் கிழமை வரை மூடப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 11ம் திகதி அரச மருத்துவ காப்புறுதி அமைப்பு (sécurité sociale) மருத்துவ உயிரியல் பகுப்பாய்வு செய்வதற்காக அறவிடப்படும் தொகையில் 9% சதவீத விலைக் குறைப்பு செய்ததின் எதிரொலியாகவே இந்த பகிஸ்கரிப்பு நடத்தப்படுகிறது.
உயிரியலாளர்களின்
(Les biologistes) தொழில் சங்கம் அமைப்பின் தலைவர் François Blanchecotte இந்த விடையம் குறித்து கருத்து தெரிவிக்கையில் " விலை குறைப்பு என்பது ஆபத்தானது இதனால் பல மருத்துவ உயிரியல் பகுப்பாய்வு ஆய்வகங்கள்
(Laboratoires d'analyses médicales) தங்களின் பணியாளர்களை குறைக்க நேரிடும் அல்லது திறந்திருக்கும் நேரங்களையும் குறைக்க வேண்டும் இதனால் பல நோயாளர்கள் கடுமையாக பாதிக்கப்படும் சாத்திய கூறுகள் இருக்கிறது புதிய அரசாங்கம் அமைந்ததும் சுகாதார அமைச்சர் இது பற்றி விரிவாக எங்களோடு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
உயிரியலாளர்களின்
(Les biologistes) தொழில் சங்கங்கள்
SNMB, SDBIO, SNBH உட்பட ஏழு நிறுவனங்கள் இந்த பஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பலவிதமான பரிசோதனைகள் இரத்த பரிசோதனைகள் உட்பட பல பரிசோதனைகள் தாமதமாகி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.