மதுபோதையில் மகிழுந்து செலுத்தியவருக்கு - காவல்நிலையத்தில் வைத்து தாக்குதல்.. !!

20 புரட்டாசி 2024 வெள்ளி 09:46 | பார்வைகள் : 9044
காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை இரு காவல்துறையினர் இணைந்து மிக மோசமாக தாக்கும் கானொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 மற்றும் 6 ஆம் வட்டாரங்களுக்கு பொதுவாக உள்ள காவல்நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றதாக அறிய முடிகிறது. 42 வயதுடைய ஒருவரை காவல்நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளனர். கடந்த ஜூலை 24 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளுக்காக பரிஸ் நகரம் முழு மூச்சாக தயாராகிக்கொண்டிருந்த வேளையில், மது அருந்திவிடு மகிழுந்து செலுத்திய குற்றத்துக்காக குறித்த 42 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
பெரு நாட்டுக் குடியுரிமை கொண்ட அவர் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு, அன்று மாலை அவர் அங்கு வைத்து தாக்கப்பட்டுள்ளார். இக்காட்சிகள் காவல்நிலைய கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளன.
தற்போது அந்த காணொளியை libération பத்திரிகை வெளியிட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான நபர் மறுநாள் IGPN காவற்படையினரிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், தற்போதே அந்த காணொளி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
2