Paristamil Navigation Paristamil advert login

ஒரு பெண் ஊடகவியலாளரின் கண்ணீர் கதை.

ஒரு பெண் ஊடகவியலாளரின் கண்ணீர் கதை.

16 புரட்டாசி 2020 புதன் 10:30 | பார்வைகள் : 19491


மிகவும் துடிதுடிப்பான, கெட்டிக்கார பெண் ஊடகவியலாளர் அவர். பரிசில் இருந்து இயங்கும் RFI வானொலியில் பணிபுரிந்தார். ஆபிரிக்க விவகாரங்களை அலசி ஆராய்ந்து, செய்தியாக்குவதில் வல்லவர். அவர் பிரான்ஸில் இருந்த நாட்களைவிட ஆபிரிக்க நாடுகளில்
இருந்த நாட்களே அதிகம். 
 
தேர்தல் நடந்தாலும் சரி, சண்டை நடந்தாலும் சரி, திருவிழா நடந்தாலும் சரி அங்கெல்லாம் தனது தொழில்நுட்ப உதவியாளர்களுடன் விரைந்து செல்வார் Ghislaine Dupont எனும் இந்த பெண் சிங்கம். 
 
ஜனவரி 13, 1956 இல் பிறந்த அவருக்கு, 2013 ம் ஆண்டு துயரமான ஆண்டாக மாறியது. அப்போது மாலி நாட்டில் தேர்தல் நடந்தது. தேர்தல் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கவும் அரசியல் தலைவர்களை கேள்வி கேட்டுக் குடைந்து எடுக்கவும் களத்தில் குதித்தார் Ghislaine Dupont. 
 
உண்மைகள் வெளிவருவது யாருக்கோ பிடிக்கவில்லைப் போலும். அவரையும் அவரது தொழில்நுட்ப உதவியாளர் Claude Verlon ஐயும் இனம் தெரியாத ஆயுததாரிகள் மாலி நாட்டின் Kidal நகரில் வைத்து கடத்திச் சென்றனர். 
 
உண்மைகளை மறைக்க வேண்டுமானால் இவர்களைக் கொல்வதே ஒரே வழி என்று அந்த ஆயுததாரிகள் நினைத்தனர். நினைத்ததைச் செய்தும் முடித்தனர். 
 
ஊடக உலகம் அதிர்ச்சியானது. கண்ணீர் விட்டது. ஊடகவியலாளர்கள் துப்பாக்கிகளுக்கு பலியாவது எப்போதும் நடப்பதுதான். இருப்பினும் இவர்கள் இருவரது சாவும் உலகை உலுக்கிப் போட்டது. 
 
இவர்கள் கொல்லப்பட்ட நவம்பர் 2 ம் திகதியை, ஐக்கிய நாடுகள் சபை ‘International Day to End Impunity for Crimes Against Journalists’ என்று அறிவித்தது. 
 
இப்போது ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்