Paristamil Navigation Paristamil advert login

 மத்திய ஆப்பிரிக்காவில் கொடிய வைரஸ் தொற்று -   6 ஆயிரத்தை கடந்த தொற்றாளர்கள்

  மத்திய ஆப்பிரிக்காவில் கொடிய வைரஸ் தொற்று -   6 ஆயிரத்தை கடந்த தொற்றாளர்கள்

20 புரட்டாசி 2024 வெள்ளி 10:39 | பார்வைகள் : 300


மத்திய ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் கிவு மாகாணத்தில் ஒரு வயது குழந்தை உட்பட கொடிய mpox தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6000 கடந்துள்ளதாகவே கூறப்படுகிறது.

உலகம் முழுக்க தற்போது அச்சம் கொள்ள வைத்துள்ள, உலக சுகாதார அமைப்பானது உலகளாவிய சுகாதார அவசரநிலை என அறிவித்துள்ள தற்போதைய mpox பரவலின் மையப்பகுதியும் இந்த கிவு மாகாணம் என்றே கூறுகின்றனர்.

போதிய நிதியாதாரம் இன்மை, தடுப்பூசி பற்றாக்குறை மற்றும் தகவல் பரிமாற்றம் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் mpox பரவலை இப்பகுதியில் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது.


ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் பரவி வந்திருந்தாலும், மருத்துவ நிபுணர்களால் அடையாளம் காண முடியாமல் போயுள்ளது. இதனால் 2022ல் mpox தொற்றானது 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருந்தது.

பொதுவாக தன்பால் ஈர்ப்பாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய இருபால் ஈர்ப்பாளர்களால் உலக அளவில் mpox பரவியதாக கூறப்பட்டு வந்தாலும், ஆப்பிரிக்காவில் குழந்தைகளுக்கும் mpox பாதிப்பு அதிக எண்ணிக்கையில் உறுதி செய்யப்பட்டது.

அத்துடன் கர்ப்பிணிகள் மற்றும் சிறார்களில் mpox பாதிப்பு அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். காங்கோ நாட்டின் Kamituga நகரமானது தங்கச் சுரங்கங்களுக்குப் பெயர் பெற்றதாகும்.

இங்கு சுமார் 300,000 மக்கள் வசித்து வருவதுடன், சுரங்க ஊழியர்கள், பாலியல் தொழிலாளர்கள், வணிகர்கள் ஆகியோர் அடிக்கடி வந்து செல்வதுண்டு. ஓராண்டுக்கு முன்னர் Kamituga நகரத்தில் சுமார் 1,000 பேர்கள் mpox தொற்றால் பாதிக்கப்பட, 8 பேர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர்.

அதில் சரிபாதி பேர்கள் சிறார்கள். அடுத்த ஆறு மாதங்களில் mpox தொற்றானது முழுமையாக கட்டுப்படுத்தப்படலாம் என்றும், அரசாங்கத்தின் ஒத்துழைப்பு கட்டாயம் என்றும் கடந்த மாதம் உலக சுகாதார நிறுவனம் கூறியது.

ஆனால் Kamituga நகரத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. இங்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 பேர்கள் mpox தொற்றால் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


தெற்கு கிவு நகரில் ஜனவரி மாதம் வெறும் 12 பேர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்டு மாதம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 600 கடந்துள்ளது.

mpox பரவலை கட்டுப்படுத்த காங்கோ அரசாங்கம் 190 மில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்கியுள்ளது. அதில் 3 மில்லியன் தடுப்பூசிக்கும் செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்