74 வயதில் வந்த ஜனாதிபதி பதவி..!!

3 கார்த்திகை 2019 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 20915
தற்போதைய ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் 39 வயதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். பிரெஞ்சு ஜனாதிபதிகளில் மிக இளமையான ஜனாதிபதி இவர் தான். இன்றைய பிரெஞ்சு புதினத்தில் 74 வயதில் ஜனாதிபதியான ஒருவரை பற்றி பார்க்கலாம்...
அவர் பெயர் Adolphe Thiers..!!
பிரான்சின் மூன்றாம் குடியரசின் இரண்டாவது ஜனாதிபதி இவர்.

1797 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் திகதி பிறந்த இவர் பல்வேறு சமூக நல செயற்பாடுகளில் ஈடுபட்டு, அரசியலில் இருந்து அமைச்சராகவும் பிரதமராகவும் இருந்தார்.
இவர் தனது 74 ஆவது வயதில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரெஞ்சு ஜனாதிபதிகளில் அதிக வயதில் ஜனாதிபதி ஆனவர் இவர் தான்.
இவர் ஜனாதிபதியாக ஓகஸ்ட் 31 ஆம் திகதி 1871 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 74 வருடங்களும் 135 நாட்களும்.
ஜனாதிபதியாக நான்கு வருடங்களும் 102 நாட்களும் இருந்தார்.
பின்னர் மே 24 ஆம் திகதி 1973 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதும், மூன்றாவது வருடம் தனது 80 ஆவது வயதில் உயிரிழந்தார்.
பிரான்சில் மிக அதிக வயதில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர் என்பது தான் வரலாறு..!!