12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது இந்தியா - நியூசிலாந்து அபார வெற்றி
26 ஐப்பசி 2024 சனி 15:01 | பார்வைகள் : 671
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்துள்ளது.
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நவம்பர் 1-ம் திகதி தொடங்குகிறது.
இந்திய அணி 12 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.
இந்திய அணி கடைசியாக 2012ல் இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியை சந்தித்தது.
இப்போட்டியில், 359 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 245 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 255 ஓட்டங்கள் எடுத்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 259 ஓட்டங்களும், இந்திய அணி 156 ஓட்டங்களும் எடுத்தன.
மிட்செல் சான்ட்னர் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.