Argenteuil : ஒரு தொன் உணவுகள் அழிப்பு.. சுகாதார அதிகாரிகள் அதிரடி..!
26 ஐப்பசி 2024 சனி 17:20 | பார்வைகள் : 13863
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் Argenteuil சந்தையில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், விற்பனைக்கு உந்ததல்லாத ஒரு தொன் உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
ஒக்டோபர் 25, நேற்று வெள்ளிக்கிழமை இந்த நடவடிக்கையினை காவல்துறையினருடன் இணைந்து அவர்கள் மேற்கொண்டிருந்தனர். இறைச்சிகள், மீன்கள், பழங்கள், காய்கறிகள், பொதி செய்யப்பட்ட உணவுகள் என ஒரு தொன் எடையுள்ள உணவுகளும், 307 அழகுசாதனப்பொருட்கள், மருந்து எனும் பெயரில் விற்பனை செய்யப்பட்ட 178 பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இல் து பிரான்ஸ் மாகாணத்தில் Argenteuil சந்தையானது மிகவும் மக்கள் புழக்கம் அதிகமாக கொண்ட இடமாகும். அங்கு அடிக்கடி இதுபோன்ற திடீர் சோதனை நடவடிக்கைகள் மெற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த மே மாதத்தில் 200 கிலோ உணவுகள் அழிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan