ஜனாதிபதி மக்ரோன் மீது விமர்சனம்!
.jpg)
27 ஐப்பசி 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 5088
1983 ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதலில் 58 பிரெஞ்சு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், ‘அவர்கள் என்றும் நினைவில் இருப்பார்கள்’ என தெரிவித்தார். அவரது இந்த அஞ்சலிக்குறிப்பினை இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.
’ஒக்டோபர் 23, 1983’ அன்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள Drakkar கட்டிடத்தை பயங்கரவாதிகள் குண்டு வைத்து தகர்த்தனர். இந்த தாக்குதலில் 58 பிரெஞ்சு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இந்த தாக்குதலை நினைவுகூரிய மக்ரோன், ”அமைதியை நிலைநாட்டச் சென்ற பிரெஞ்சு இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் என்றும் நினைவில் இருப்பார்கள்” என தெரிவித்தார்.
இந்நிலையில், அந்த பயங்கரவாத தாக்குதலினை ஹிஸ்புல்லா அமைப்பு மேற்கொண்டிருந்தது எனவும், அதனை மக்ரோன் சொல்ல மறுத்துள்ளார் எனவும் அவர் மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் காவல்துறை வீரர் Bruno Attal இது குறித்து கடுமையான விமர்சித்து பதியப்பட்ட பதிவு ஒன்றுக்கு ஏராளமான ஆதரவு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.