'நான்கு சீசன்' விடுதி! - பரிசில் ஒரு முக்கிய அடையாளம்..!!
2 கார்த்திகை 2019 சனி 10:30 | பார்வைகள் : 18189
நேற்றைய பிரெஞ்சு புதினத்தில் பரிசில் உள்ள மிக விலையுயர்ந்த விடுதி குறித்து தெரிவித்திருந்தோம். அதற்கு பல வாசகர்கள் ஆர்வமாக கருத்துக்கள் தெரிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து இன்றைய பிரெஞ்சு புதினத்தில் மற்றுமொரு வித்தியாசமான விடுதி குறித்து பார்க்கலாம்.
<<Four Seasons>> என்பது அந்த விடுதியின் பெயர். எட்டாம் வட்டாரத்தில் உள்ள Franklin Delano Roosevelt மெற்றோ நிலையத்துக்கும் George V மற்றும் Champs-Elysées-Clémenceau நிலையங்களுக்கும் இடையே உள்ளது இந்த விடுதி. இதுவும் சாட்சாத் ஒரு ஆடம்பர விடுதியே.
நான்கு காலங்கள் என அர்த்தப்படும் இந்த விடுயின் பெயர் சும்மா வைக்கப்பட்டதல்ல. அதற்கு ஏற்றால் போல் உள்ளே விஷயம் உள்ளது.
நான்கு பருவ காலத்துக்கும் ஏற்றால் போல் இந்த விடுதி தன்னை உருமாற்றிக்கொள்ளும்.
வரவேற்பறையில் உள்ள பூக்கள், தினமும் அறைகளில் வைக்கப்படும் பூக்கள் அந்த அந்த காலங்களை பிரதிபலிக்கின்றது.
தவிர, உங்குள்ள மது அருந்தகத்தில் நான்கு சீசன்களுக்குமான சிறப்பு மதுபானங்களும் கிடைக்கின்றன. உதாரணத்துக்கு நீங்கள் கடும் கோடை காலத்தில் இங்கு தங்குகின்றீர்கள் என்றால் அதற்கு ஏற்றால் போலும் உடலுக்கு உகந்ததாகவும் மதுபானத்தின் 'மெனு கார்ட்' மாற்றமடைந்துவிடும்.
தவிர இது ஒரு ஐந்து நட்சத்திர விடுதி.
மொத்தமாக 244 அறைகள் கொண்டுள்ளன. இரவு நேர விடுதி, மதுச்சாலை, நீச்சல் தடாகம், குழந்தைகள் பராமரிப்பு பகுதி, காதலர்களுக்கு என பிரத்யேகமாக இரவு உணவு வளாகம் என வசதிகள் ஒரு தொகை.
கட்டணம்..?? ஓர் இரவுக்கு €1,000 களில் ஆரம்பித்து €3,000 வரை செல்கிறது.