ரோகித் சர்மாவின் மோசமான சாதனை- WTC இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா இந்தியா?
27 ஐப்பசி 2024 ஞாயிறு 09:16 | பார்வைகள் : 491
நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மா மோசமான சாதனை படைத்துள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி படுதோல்வி அடைந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் தொடரை இழந்துள்ளது.
இந்த டெஸ்ட் தோல்விக்கு பிறகு, இந்த நூற்றாண்டில் சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் போட்டிகளை இழந்த இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
15 டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா 4 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளார்.
ரோகித் சர்மாவை தொடர்ந்து தோனி மற்றும் கங்குலி ஆகியோர் 3 தோல்விகளுடன் 2 வது இடத்தில் உள்ளனர்.
இந்திய அணியின் இந்த தொடர் தோல்வியின் காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வேண்டும் என்றால் அடுத்து இந்திய அணி விளையாட உள்ள 6 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்றாக வேண்டும்.
இதில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மீதமுள்ள 1 போட்டியும், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.