Paristamil Navigation Paristamil advert login

இந்த விடுதியில் ஓர் இரவு தங்க கட்டணம் என்ன தெரியுமா..?? ..??!!

இந்த விடுதியில் ஓர் இரவு தங்க கட்டணம் என்ன தெரியுமா..?? ..??!!

1 கார்த்திகை 2019 வெள்ளி 10:30 | பார்வைகள் : 18366


உலகின் மிகச்சிறந்த சுற்றுலாத்தனமான பரிசில் ஆடம்பர் விடுதிகளுக்கு பஞ்சமே இல்லை. சரி பரிசில் அதிக கட்டணம் கொண்ட விடுதி எது தெரியுமா?? பல விடுதிகளை அலசி ஆராய்ந்து தேடி அந்த விடுதியை கண்டுபிடித்துள்ளோம். 
 
பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில், சோம்ப்ஸ்-எலிசேக்கு அருகே உள்ள Plaza Athénée விடுதி தான் அது. 
 
 
பாரம்பரிய கட்டிடத்திலான இந்த விடுதி, ஒரு நான்கு நட்சத்திர விடுதியாகும்.
 
1909 ஆம் ஆண்டு இதன் கட்டுமாணப்பணிகள் ஆரம்பி க்கப்பட்டு 1913 ஆம் ஆண்டில் நிறைவுக்கு வந்தது. இந்த நூற்றாண்டு காலப்படுதியில் பல்வேறு நபர்களுக்கு கைமாறி, பல யுதங்களையும் சேதங்களையும் கண்டது. இறுதியாக 1936 ஆம் ஆண்டு புனரமைப்பு செய்யப்பட்டு நான்கு நட்சத்திர விடுதியாக உருவெடுத்தது. 
 
இந்த விடுதியில் மொத்தம் 208 அறைகள் உள்ளன. இதில் பாதிக்கும் மேல் உள்ள அறைகளில் இருந்து ஈஃபிள் கோபுரத்தை பார்க்கலாம். அறையின் வழியாக இரவில் ஜொலிக்கும் ஈஃபிள் கோபுரத்தை ரசிப்பது அலாது பிரியம் என பலர் இணையத்தில் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். 
 
தவிர இந்த விடுதியில் ஐந்து உணவகங்கள் உள்ளன. ஐந்தும் ஐந்து ஃப்ளேவர். 
 
குறிப்பாக ஜப்பானிய கலாச்சார உணவுகள் தயாராகும் உணவகம் பலரது 'ஃபேவரிட்' என உச்சுக்கொட்டுகின்றார்கள். தவிர, சீன, பிரெஞ்சு இரஷ்ய உணவுகள் எல்லாம் இங்கு தாராளமாய், சுவையாய் கிடைக்கின்றது. 
 
 
இங்கிருந்து 15 நிமிடங்கள் நடைபயணம் மேற்கொண்டால்.... இரும்பு மனுஷியின் கால்களை தொட்டுவிடலாம்.  
 
மேலதிக கட்டணங்கள் இல்லாத நீச்சல் தடாகம், ஸ்பா (Spa), கொக்டைல் பார் உள்ளிட்ட வசதிகள் ஏராளம். உலகின் தலைசிறந்த மது வகைகள் எல்லாம் ஜஸ்ட் தொலைபேசியூடாகவே உங்கள் அறைக்கு வரவழைக்கலாம். 
 
 
அதெல்லாம் சரி தான் பாஸ்... இங்கு தங்குவதற்கு கட்டணம் தான் என்ன என நீங்கள் முணுமுணுப்பது புரிகிறது. 
 
பரிசில் உள்ள மிக அதிக கட்டணம் கொண்ட இந்த விடுதியில் ஓரிரவு தங்க குறைந்தபட்ச கட்டணம் €3,000... அதிகபட்ச கட்டணம் €20,000...!! 
 
 
 
 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்