Paristamil Navigation Paristamil advert login

கங்குவா ரஜினி நடிக்கவிருந்த படமா?

கங்குவா ரஜினி நடிக்கவிருந்த படமா?

27 ஐப்பசி 2024 ஞாயிறு 13:14 | பார்வைகள் : 1124


சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் “கங்குவா”. வரலாற்று பின்னணியில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் நவம்பர் மாதம் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தியாவில் 35 மொழிகளில் ஒட்டுமொத்தமாக 6000 திரையரங்குகளில் “கங்குவா” திரைப்படம் வெளியாகவுள்ளது. மேலும் படத்தில் 10 வெவ்வேறு கெட்டப்பில் சூர்யா நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்தில் சூர்யாவுடன் பாலிவுட் பிரபலங்களான திஷா பட்டாணி, பாபி தியோல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சில நாட்களுக்கு முன் வெளியான படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் மக்களை மிரள வைத்து மாபெரும் வரவேற்பை பெற்றது.

படம் வெளியாக சில நாட்களே உள்ள நிலையில் “கங்குவா” படத்தின் புரோமோஷன் பணிகளில் சூர்யா, திஷா பட்டாணி, பாபி தியோல் ஆகியோர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று (26-10-24) சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் சூர்யாவின் கங்குவா இசைவெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.  நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் பங்கேற்று கங்குவா படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர். படப்பிடிப்பின் காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத நடிகர் ரஜினி காணொளி மூலம் படக்குழுவை வாழ்த்தி பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

அதில் பேசிய ரஜினி, “சிறுத்தை சிவாவுடன் இனைந்து அண்ணாத்த படத்தில் பணியாற்றினேன், 20, 30 படங்களில் பணியாற்றயது போன்ற நெருக்கம் எங்களுக்குள் ஏற்பட்டது. அவரை போன்ற நல்ல மனிதரை திரையுலகில் பார்க்கமுடியாது. அண்ணாத்த படத்தின் பெரும்பாலான பகுதி ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில்தான் எடுக்கப்பட்டது. அப்போது நான் சிவாவிடம் ‘எண்ணக்கழு ஒரு பீரியட் படம் பண்ணுங்க’ என்றேன் சரி என்று சொன்னார். அப்படி பார்த்தல் கங்குவா எனக்காக தயார் செய்யப்பட்ட படமாக இருக்கலாம். சிவா எனக்காகவும் ஒரு கதையை உருவாக்குவார் என்று நம்புகிறேன்.

சூர்யாவின் கண்ணியம், அறிவு, ஒழுக்கம், நேர்மையை பலரும் அறிந்திருப்பார்கள், அவரை போல ஒருத்தரை யாராலும் பார்க்க முடியாது. வித்தியாசமான கதைகளில் நடிக்க வேண்டும் என்பதுதான் சூர்யாவின் விருப்பம். அப்படி அவருக்கு கங்குவா படம் அமைந்துள்ளது. பத்ம மிகப்பெரிய வெற்றிபெற எனது வாழ்த்துகள்” என்று கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்