அறுகம்பை பகுதியில் வெடிகுண்டுகள் இருப்பதாக கூறி பயணிகளை மிரட்டியவர் கைது

27 ஐப்பசி 2024 ஞாயிறு 13:46 | பார்வைகள் : 4825
அறுகம்பை பகுதியில் சுற்றுலாவில் ஈடுபட்ட சுற்றுலா பயணிகளுக்கு, அந்த பகுதியில் உள்ள சில இடங்களில் வெடிகுண்டுகள் உள்ளதாக போலித் தகவல்களை வெளியிட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டியிலிருந்து அறுகம்பை பகுதிக்கு சுற்றுலாவில் ஈடுபடுவதற்காக சென்றவர்களினால் பொத்துவில் பொலிஸாரிடம் அளிக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அறுகம்பை பகுதியில் 3 இடங்களில் வெடிகுண்டு அச்சுறுத்தல் உள்ளதாகவும், அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் சுற்றுலாவில் ஈடுபட்டவர்களிடம் சந்தேகநபர் கூறியுள்ளார்.
இந்தநிலையில், குறித்த செய்தி தொடர்பில், சுற்றுலாவில் ஈடுபட்டவர்கள், பொத்துவில் பொலிஸாரிடம் முறைப்பாடளித்ததையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கைதானவர் சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளது.
அறுகம்பை பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகவும் அந்த பகுதியில் உள்ள தமது நாட்டுப் பிரஜைகளை எச்சரிக்கையாக செயற்படுமாறும் அமெரிக்கத் தூதரகத்தின் அறிவிப்பையடுத்து குறித்த விடயம் பேசுபொருளாக மாறியது.
இஸ்ரேல் பிரஜைகளை இலக்கு வைத்து, தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக நம்பத் தகுந்த தகவல்களை மேற்கோள் காட்டி, அமெரிக்கா அந்த எச்சரிக்கையை விடுத்திருந்தது.
அமெரிக்காவைத் தொடர்ந்து, பிரித்தானியா, கனடா, ரஷ்யா மற்றும் அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளும், அறுகம்பை பகுதியில் தாக்குதல் நடத்தப்படும் எனவும் அறுகம்பை பகுதியில் சுற்றுலாவில் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தன.
இந்தநிலையில், அறுகம்பை சம்பவம் தொடர்பில் கைதான 3 சந்தேக நபர்களும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்குட்படுத்தபபட்டு வருகின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1